சப்-இன்ஸ்பெக்டர் சேரில் அமர்ந்த முதல்வர்.. உடலே சிலிர்த்துவிட்டது.. காவல் உதவி ஆய்வாளர் நெகிழ்ச்சி!
தருமபுரி: நேற்று தருமபுரியில் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தது குறித்து காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கவாசகம் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
நேற்று தருமபுரிக்கு பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் திடீரென காவல்நிலையம் ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை காவல் நிலையத்திற்கு சென்றவர், அங்கு போலீசார் இருக்கையில் அமர்ந்து ஆய்வு பணிகளை செய்தார்.
அங்கு இருக்கும் கோப்புகளை, தினசரி பதிவேடுகளை ஆய்வு செய்தார். அதேபோல் ஒவ்வொரு போலீஸாரிடமும் அவர்களின் தனிப்பட்ட பணிகள் குறித்தும், தினசரி நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். தமிழ்நாடு காவலர்கள் மத்தியில் இந்த திடீர் சந்திப்பு வைரலாகி உள்ளது.

மாணிக்கவாசகம்
இந்த நிலையில் தனது 35 ஆண்டுகால அனுபவத்தில் முதல்வர் ஒருவர் இப்படி எளிமையாக வந்து தனது இருக்கையில் அமர்ந்ததை எதிர்பார்க்கவில்லை என்று பென்னாகரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கவாசகம் பேசும் ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை யாரும் செய்திடாத செயலை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் செய்து உள்ளார்.

ஸ்டாலின் காவல்நிலையம்
யாரும் எதிர்பாராத விதமாக அதியமான் கோட்டை காவல்நிலையத்தில் ஆய்வு செய்துள்ளார். அங்கு உள்ள பதிவேடுகளை பார்த்து, காவலர்களிடம் விசாரித்துவிட்டு முதல்வர் ஸ்டாலின் சென்றதை பார்க்கும் போது உடல் சிரிக்கிறது. பூரிப்பு ஏற்படுகிறது. 35 ஆண்டுகளில் எனக்கு தெரிந்து இப்படி நடந்ததே இல்லை. ஒரு சாதாரண சப் இன்ஸ்பெக்டர் இருக்கும் இருக்கையில், தமிழ்நாடு முதல்வர் அமர்ந்தது சிலிர்ப்பை ஏற்படுகிறது.

பென்னாகரம் காவல்நிலையம்
முதல்வர் மிக மிக எளிமையாக செயல்பட்டு இருக்கிறார். நினைத்து பார்க்கவே.. பிரமிப்பாக இருக்கிறது. இதை பற்றி எப்படி சொல்வது என்றே தெரியவில்லை., என்று பென்னாகரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கவாசகம் தனது ஆடியோவில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த ஆய்வின் போது முதல்வர் ஸ்டாலின், தினசரி போலீசார் நடவடிக்கை, முதல்வர் தனிப்பிரிவில் இருந்து வரும் உத்தரவுகள் மீதான நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.

முதல்வர் தனிப்பிரிவு
முதல்வர் தனிப்பிரிவில் இருந்து வரும் உத்தரவுகள் எத்தனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நேற்று கேள்வி எழுப்பினார். முதல்வர் வந்த தகவல் கேட்டு அருகில் இருந்த போலீசாரின் குடும்பத்தினர் அங்கு வந்தனர். அவர்களிடமும் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். பின்னர் போலீசாருக்கு வார விடுமுறை வழங்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அங்கு இருந்த காவலர்கள் நன்றி தெரிவித்தனர்.

அறிவிப்பு
தமிழ்நாடு போலீசாருக்கு வார விடுமுறை, பிறந்த நாள் விடுமுறை, மிகைநேர ஊதியம் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதேபோல் பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய பாஸ், இடர்ப்படி 800 ரூபாயிலிருந்து 1,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் இது அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும் என்றும் அரசு அறிவித்துள்ளது. முதல்வரின் இந்த அறிவிப்புகளை போலீசார் நெகிழ்ச்சியோடு வரவேற்று உள்ளனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications