ரூ.1,500 லஞ்சம்.. 100 நாள் வேலைத் திட்டத்தில் தொடரும் முறைகேடு - பொன்னாகரம் மக்கள் புகார்
தருமபுரி: பென்னாகரம் அருகே 100 நாள் வேலைத்திட்ட அட்டை மற்றும் ஊதியம் வழங்குவதில் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாக பொதுமக்கள் புகாரளித்துள்ளனர்.
Recommended Video
பென்னாகரத்தை அடுத்துள்ள பெரும்பாலை பஞ்சாயத்தில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புகள் பொதுமக்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதனை தொடர்ந்து இன்று பெரும்பாலை பஞ்சாயத்தில் பல்வேறு கிராம பகுதியை சேர்ந்த பெண்களுக்கு முறையாக 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்படவில்லை என சோளிகவுண்டனூர் பகுதியில் உள்ள ஏரியில் அங்குள்ள கிராம பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றிய வாக்குவாதம்
தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவியிடம் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்வதற்காக அதிகாரிகள் முயற்சித்தும் பயன் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் அதிகாரிகள் அந்த இடத்தை விட்டு வெளியேறினர்.

முறைகேடுகள்
இதுகுறித்து அப்பகுதி பெண்களிடம் விசாரித்தபோது, "100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் எங்களுக்கு வருடத்திற்கு 10 முதல் 15 நாட்கள் மட்டுமே வேலை கொடுக்கின்றனர். அப்படி செய்கின்ற வேலைக்கு பணம் முழுவதுமாக கிடைப்பதில்லை. இங்கு வேலை செய்யும் பணிக்குழு தலைவர் சரியாக வேலை இடத்திற்கு வருவதில்லை. வேலைக்கு வராத நபர்களுக்கு வந்ததைபோல் வருகை பதிவேட்டில் கணக்கு வைப்பது போன்ற முறைகேடான வேலைகளை செய்து வருகின்றனர்.

ரூ.1500 லஞ்சம்
இதனால் இப்பகுதி மக்கள் பஞ்சாயத்து தலைவரிடம் தகவல் அளித்தால் எந்த ஒரு பதிலும் கிடைப்பதில்லை. மேலும் புதிதாக 100 நாள் அட்டை வாங்க வேண்டும் என்றால் பணிக்குழு தலைவருக்கு ரூ.1500 பணம் கொடுத்து வாங்க வேண்டும். அந்த பணத்திற்கு கூட இன்னும் சரியாக வேலை கிடைக்கவில்லை." என்று வேதனை தெரிவிக்கின்றனர். அதற்கும் பணத்தை முழுமையாக கொடுப்பதில்லை வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்துவதும் இல்லை.

பொதுமக்கள் வேதனை
100 நாள் வேலைத்திட்டத்திற்கு அட்டை பெற வேண்டும் என்றாலும் ரூ.500 ரூபாய் வரை பணிக்குழு தலைவருக்கு கொடுத்தால் மட்டுமே 100 நாள் வேலை திட்ட அட்டை பெற முடியும் என்றும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் பஞ்சாயத்து மக்கள் கூறுகையில் இந்த ஊராட்சியில் உள்ள 10 கிராம மக்களில் மூன்று கிராம மக்களுக்கு மட்டும் தொடர்ந்து 100 நாட்கள் முழுமையாக வேலை தருவதாகவும் மற்ற ஏழு கிராம மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும் ஊராட்சிமன்றத் தலைவியின் இந்த பாராமுகம் தொடர்ந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

பணியிடமாற்றம் செய்ய கோரிக்கை
100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசும் 150 நாளாக அதிகரிப்பதற்காக தெரிவித்து வரும் நிலையில் 100 நாள் வேலைக்கே முழுமையாக வேலை வழங்காமல் ஏழு நாள் மட்டும் வழங்கி ஏமாற்றி வருவது அப்பகுதி பெண்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இறுதிவரை அப்பகுதி பெண்கள் புதிய பணிக்குழு தலைவரை மாற்றும் வரை வேலை செய்யமாட்டோம் என்று வேலையை புறக்கணித்து விட்டனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications