போலீஸ்காரரின் கையை கடித்து வைத்த தவெக தொண்டர்.. தர்மபுரி போராட்டத்தில் அதிர்ச்சி. என்ன நடந்தது?
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் புதிதாக மதுபான பார் திறக்கப்பட்டுள்ளது. இதனை முற்றுகையிட்டு இன்று தவெகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும், தவெகவினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த வேளையில் தவெக தொண்டர் ஒருவர் போலீசின் கையை கடித்த வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடுவில் தக்காளி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு இந்த மார்க்கெட்டுக்கு பெண்கள்,குழந்தைகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தான் தற்போது அந்த பகுதியில் புதிதாக தனியார் மதுபான பார் தொடங்கப்பட்டது.

‛மனமகிழ் மன்றம்' என்ற பெயரில் புதிய பார் தொடங்கப்பட்டது. இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. பலரும் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி அங்கு சென்று வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் அந்த தனியார் மதுபான பாரை மூட வேண்டும். இல்லாவிட்டால் மாற்று இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர். ஆனால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் தான் இன்று தவெகவினர் பெண்கள், இளைஞர்கள் என்று சுமார் 300க்கும் அதிகமானவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுபான பாரை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இருப்பினும் அவர்கள் போலீசாரை தாண்டி மதுபான பாரை அடைந்தனர். அங்கு கதவு பூட்டப்பட்டு கிடந்தது. அதன் மீது ஏறியும், அதனை அசைத்து அசைத்து திறந்தும் உள்ளே சென்று தர்ணாவில் ஈடுபட்டனர். மதுபான பாரை மூடினால் தான் போராட்டத்தை கைவிடுவதாக கூறினர்.
இதையடுத்து போலீசார் அவர்கள் அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். அரசு பஸ்களில் ஏற்றி அருகே உள்ள தனியார் மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். முன்னதாக தவெக தொண்டர் ஒருவர் போலீஸ்காரரின் கையை கடித்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது தவெகவினரை போலீசார் தடுத்தனர். அப்போது போலீசாருக்கும், தவெகவினருக்கும் இடையே கடுமையாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த வேளையில் தவெகவை சேர்ந்த தொண்டர் ஒருவர் போலீஸ்காரரின் கையை கடித்து வைத்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. தவெகவினரின் இந்த போராட்டம் பாலக்கோடுவில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தமிழக பள்ளிக்குள் சாதி, மத அடையாளங்களுக்கு இடமில்லை.. நேரடியாகவே சொன்ன அமைச்சர் ராஜ்மோகன்! -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
விஜய் அதிரடி உத்தரவு! டெல்லி பயணம் முடித்த பின்பு முக்கியமான சேஞ்ச்! -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
அரசு மருத்துவமனைகளில் புரட்சி.. இனி மொபைல் ஆப் மூலம் டோக்கன் முன்பதிவு.. விஜய் அரசின் புதிய முடிவு! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக எதிர்த்த VB-GRAM திட்டத்தை.. அமல்படுத்தும் விஜய் அரசு! தமிழகத்துக்கு ₹5,000 கோடி கூடுதல் சுமை -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம்












Click it and Unblock the Notifications