சின்னபசங்க முன்னாடியெல்லாம் என்னை.. கதறிய கிரிஜா.. மொத்தம் 90 மாத்திரைகள்.. அதிர்ந்த தர்மபுரி
90 மாத்திரைகளை விழுங்கிய பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்
தருமபுரி: மாத்திரைகளை ஒவ்வொன்றாக விழுங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சத்துணவு பெண் ஊழியரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த சொன்னம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கிரிஜா.. 26 வயதாகிறது..
இவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது.. கணவர் பெயர் கலைத்தென்றல்.. இந்திய ராணுவத்தில் பணிபுரிகிறார்.

சந்தேகம்
இவர்களுக்கு 11 மாத பெண் குழந்தை உள்ளது... கிரிஜா கடந்த 4 வருடங்களுக்கு முன்பு, சொன்னம்பட்டி என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்... இப்பள்ளி தலைமை ஆசிரியருக்கும் கிரிஜாவுக்கு கருத்து வேறுபாடு அடிக்கடி எழுந்து வந்துள்ளது..

அவமானம்
குறிப்பாக, குழந்தைகளுக்கு வழங்குவதற்காக அனுப்பப்பட்ட முட்டையில் குறைந்து உள்ளதாககூறி, கிரிஜாவை மாணவர்கள் முன்னிலையில், தலைமை ஆசிரியர் சாந்தி தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறாராம்.. இது சம்பந்தமாகவே, கிரிஜாவுக்கு அளவுக்கு அதிகமான தொந்தரவும் தந்து வருவதாக கூறப்படுகிறது... ஒருகட்டத்தில் மனமுடைந்துபோன கிரிஜா, பள்ளி சத்துணவு அறைக்குள்ளேயே தலைமை ஆசிரியை கண்டித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்...

90 மாத்திரைகள்
அதுவும் 90 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தன்னுடைய தற்கொலை முயற்சியை அவரே செல்போனில் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டு, அங்கேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். ரூமுக்குள் கிரிஜா விழுந்து கிடப்பதை பார்த்த அங்கிருந்த ஊழியர்களும், பொதுமக்களும் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து, பிறகு மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையிலும் அனுமதித்துள்ளனர்..

தற்கொலை முயற்சி
இப்போது கிரிஜாவுக்கு தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.. இதையடுத்து, பள்ளி கல்விதுறையினர் மற்றும் காரிமங்கலம் போலீசார் இது சம்பந்தமான விசாரணையில் இறங்கி உள்ளனர். சத்துணவு பெண் ஊழியர் மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே கிரிஜாவின் தற்கொலை முயற்சி வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.. அதில் கிரிஜா கண்ணீருடன் பேசியுள்ளதாவது:

வீடியோ
"என் பெயர் கிரிஜா.. சத்துணவு அமைப்பாளராக வேலை பார்க்கிறேன்.. என்னை ரொம்ப கொடுமைப்படுத்துறாங்க.. சின்ன பசங்க முன்னாடிலாம் அசிங்க படுத்துறாங்க.. ரொம்ப அவமானமா இருக்கு.. என்னால முடியல.. என் கொழந்தய பாத்துக்குங்க கலெக்டரம்மா.. ரொம்ப அவமான படுத்துறாங்க.. எங்கம்மா கிட்டயே கொழந்தய குடுத்திருந்து அவுங்கதான் வளத்தாங்க" என்று சொல்லி கொண்டே மாத்திரைகளை வாயில் கொட்டுகிறார் கிரிஜா... விசாரணை நடத்தி முடித்தால்தான் இது தொடர்பான விவரங்கள் மேலும் தெரியவரும்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications