லாரி டிரைவருடன் "தப்புத்தாளத்தில்" சிக்கிய பிரியா.. பாறைகளில் சிதைந்த 2 ஜீவன்.. திணறிடுச்சு தருமபுரி
தருமபுரி: தர்மபுரி மாவட்டத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது.. ஒட்டுமொத்த கிராம மக்களும் கொந்தளித்து போயிருக்கிறார்கள்.. என்ன நடந்தது?
அதியமான்கோட்டை அருகே உள்ளது முண்டாசு புறவடை என்ற கிராமம்.. இங்கு வசித்து வருகிறார் பாலச்சந்தர்.. 30 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் பிரியா.. 24 வயதாகிறது. இந்த தம்பதிக்கு ஜஸ்வந்த்(6), தர்சன்(4) என்ற மகன்கள் இருக்கின்றனர்.
பாலச்சந்தர்: பாலச்சந்தர் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். அதுபோலவே, பிரியாவும் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.. ஆனால், பணிநிமித்தம் காரணமாக, ஓசூரில் பாலச்சந்தர் தங்கியிருக்கிறார்.. பிரியா மட்டும் தினமும் கம்பெனி பஸ்சில் வேலைக்கு சென்று வருகிறார்.

இந்நிலையில், நேற்று ரம்ஜான் பண்டிகைக்கு பள்ளி விடுமுறை என்பதால், ஜஸ்வந்த், தர்ஷன் இருவருமே வீட்டிற்கு வெளியேயுள்ள மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.. அப்போது திடீரென 2 குழந்தைகளையுமே காணவில்லை.. இதைப்பார்த்த குழந்தைகளின் பாட்டி ஜெயா பதறிப்போனார்.. உடனே கிராம மக்களுடன் சேர்ந்து, அக்கம்பக்கத்தில் பேரக்குழந்தைகளை தேடிப்பார்த்தார். குழந்தைகள் எங்குமே கிடைக்கவில்லை.
காட்டுப்பகுதி: இறுதியில், இவர்கள் வீட்டிலிருந்து 1 கிலோ மீட்டர் தூரமுள்ள காட்டுப்பகுதியில் 2 குழந்தைகளுமே ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தனர்.. அங்கிருந்த பாறையின் இடுக்கில் இருவருமே சுருண்டு விழுந்து கிடந்ததை பார்த்த பொதுமக்கள், 2 குழந்தையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் தர்சன் ஏற்கனவே இறந்து விட்டதாக ,டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.. ஜஸ்வந்துக்கு மட்டும் தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, தனிப்படையும் அமைத்து விசாரணையையும் ஆரம்பித்தனர்.. அப்போதுதான் பக்கத்து வீட்டுக்காரர் வெங்கடேசன் மீது சந்தேகம் விழுந்தது. வெங்கடேசனுக்கு 27 வயதாகிறது.. இவர் ஒரு லாரி டிரைவர்.. பாலச்சந்தருக்கு உறவினரும்கூட.
லாரி டிரைவர்: இந்த லாரி டிரைவர் வெங்கடேசனுடன் பிரியாவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.. இருவருமே தனிமையில் சந்தித்து அடிக்கடி ஜாலியாக இருந்திருக்கிறார்கள்.. ஒருகட்டத்தில், வெங்கடேசனை தவிர்க்க ஆரம்பித்தார் பிரியா.. குழந்தைகள் இருப்பதை காரணம் காட்டி, வெங்கடேசனிடம் நெருங்கி பழகுவதையும் குறைத்து வந்துள்ளார்.
இது வெங்கடேசனுக்கு ஆத்திரத்தை தந்துள்ளது.. இதற்கு பிறகுதான் நேற்றைய தினம், விளையாடிக்கொண்டிருந்த பிரியாவின் குழந்தைகளை காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்று கொலை செய்துள்ளார் வெங்கடேசன்.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, போலீசார் வெங்கடேசனை கைது செய்திருக்கிறார்கள்.
தகாத உறவு: இந்த தகாத உறவு வேண்டாம் என்று வெங்கடேசனிடம் பிரியா ஏற்கனவே பல முறை சொன்னாராம்.. "இனிமேல் நாம் பழகுவதை நிறுத்தி கொள்ளலாம்.. என்னுடைய குழந்தைகளுக்காக வாழப்போகிறேன்" என்றாராம்..
இதற்கு வெங்கடேசன் மறுப்பு சொல்லியும், பிரியா தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்திருக்கிறார்.. தன்னுடன் எப்போதும்போல் பழகாவிட்டால் குழந்தைகளை கொன்றுவிடுவதாக வெங்கடேசன் மிரட்டியிருக்கிறார்.. அப்போதும் பிரியா தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ளவில்லையாம்.
கொலை தீவிரம்: அதற்கு பிறகுதான் வெங்கடேசன் குழந்தைகளை கொல்ல முடிவு செய்திருக்கிறார். நேற்று இதற்காக விளையாடிக் கொண்டிருந்த 2 குழந்தைகளையும் வண்டியில் அழைத்துச் சென்றுள்ளார்.. காட்டுப்பகுதியிலிருந்த பாறையிலேயே தர்சனை அடித்து கொன்றுள்ளார்.. பெரிய கற்களை கொண்டு வந்து ஜஸ்வந்தை தாக்கியுள்ளார்.
இதில் தர்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட, ஜஸ்வந்த் படுகாயமடைந்து மயங்கி விழுந்துள்ளான்.. ஆனால், ஜஸ்வந்த்தும் இறந்துவிட்டதாக நினைத்து, சடலங்களை அங்கேயே போட்டுவிட்டு வெங்கடேசன் மறுபடியும் ஊருக்குள்ளேயே வந்துள்ளார். அதற்குள் குழந்தைகளை காணவில்லை என்று ஊர் மக்கள் தேடி கொண்டிருப்பதை பார்த்த வெங்கடேசன், "2 குழந்தைகளையும் முகமூடி அணிந்து வந்த வடமாநில இளைஞர்கள் கடத்தி சென்றுவிட்டார்கள்" என்று சொல்லி உள்ளார்..
கொடூரம்: எனினும், கிராம மக்கள் காட்டுப்பகுதியில் தேடிப்பார்க்கலாம் என்று சென்றபோதுதான், குழந்தைகளை கண்டெடுத்தனர்.. முதன்முதலில் ஊருக்குள் வந்து, குழந்தைகளை கடத்தியது வெங்கடேசன்தான் என்பதால், அவர் மீது சந்தேகம் போலீசாருக்கு திரும்பியிருக்கிறது.. இப்போது வெங்கடேசனிடம் விசாரணை நடந்து வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications