வீழ்ந்தனர் பொன்னியின் செல்வர்கள்!தோற்றனர் பல்லவர்கள்! பாண்டியர் தேசத்து 'நந்தினி' மகுடம் சூட்டினார்!
திண்டுக்கல்: பிளஸ் டூ தேர்வில் திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். பிளஸ் டூ தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்களை மாணவி ஒருவர் பெறுவது இதுவே முதல் முறை.
தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. தமிழ்நாட்டில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை பிளஸ்டூ தேர்வுகளில் இல்லாத ஒரு வரலாற்று சாதனையை திண்டுக்கல் மாவட்ட மாணவி நந்தினி படைத்துள்ளார். பிளஸ் டூ தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பிளஸ் டூ தேர்வில் மாணவி ஒருவர் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெறுவது இதுவே முதல் முறை.
திண்டுக்கல் நகரில் உள்ள அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் LKG முதல் படித்து வருபவர் சரவணக்குமார்- பானுபிரியா தம்பதியர் மகளான நந்தினி. தமது வரலாற்று சாதனை குறித்து செய்தியாளர்களிடம் மாணவி நந்தினி கூறியதாவது: நான் ஒரு கூலித் தொழிலாளியின் மகள். கூலித் தொழிலாளி மகளாகிய என்னால் என்ன செய்துவிட முடியும் என கவலைப்படவில்லை. எனக்கு கல்விதான், படிப்புதான் சொத்து என என் பெற்றோர் சொல்லி சொல்லி வளர்த்தனர். அதனையே நானும் இடைவிடாமல் கடைபிடித்தேன். அதனால்தான் இவ்வளவு மதிப்பெண்களை என்னால் பெற முடிந்துள்ளது. நம்பிக்கையுடன் முயற்சித்தால் அனைத்தும் சாத்தியமாகும். எனக்கு ஆடிட்டராக வேண்டும் என்பது விருப்பம். அதற்கான மேல்படிப்புகளை படிக்க உள்ளேன். இவ்வாறு மாணவி நந்தினி கூறினார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications