திண்பண்டங்களை வாங்கி கொடுத்து 8 மாதமாக 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்.. 3 பேர் கைது
திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே 8 மாத காலமாக திண்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து ஏமாற்றி எட்டாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவந்த இரண்டு முதியவர்கள் உட்பட 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த சிலுவத்தூர் அருகே உள்ள ஆர்.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல் (37), கூலித்தொழிலாளி. 13 வயதான எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் தனியாக வீட்டில் இருந்தார்.

பாலியல் பலாத்காரம்
இதை தெரிந்து கொண்டு அவருக்கு திண்பண்டங்கள் வாங்கி கொடுத்து ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் (65), குருநாதன் (70) ஆகியோரும் மாணவியை ஏமாற்றி தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

3 பேர் பலாத்காரம்
மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி மூன்று பேரும் மாணவியை பலமுறை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுமியும் உயிருக்கு பயந்து இதுகுறித்து வெளியே யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.

கொடுமை
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் மாணவியை தங்கவேல் தனியாக அழைத்துச் செல்வதை பார்த்து மாணவியின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெற்றோர் மாணவியிடம் விசாரித்தபோது அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை அவர்களிடம் கூறியுள்ளார்.

போக்சோ சட்டத்தின் கீழ் கைது
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் இதுகுறித்து புகார் செய்தனர். அதன்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தென்றல் வழக்குப்பதிவு செய்து தங்கவேல், பெருமாள், குருநாதன் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications