நாட்டு வெடிகுண்டு வெடித்து திண்டுக்கல் அருகே 2 இளைஞர்கள் பலி.. சட்டவிரோத வெடி தயாரித்தபோது விபரீதம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மங்கம்மாள் சாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் ராசு மகன் ராஜா (25) மற்றும் முருகன் மகன் கருப்பையா (32). இவர்கள் இருவரும் அரவங்குறிச்சி பகுதியில் உள்ள மாந்தோட்டம் ஒன்றில் திருவிழா மற்றும் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்காக அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இன்று சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் வைத்திருந்த இடத்தில் வெடி விபத்து ஏற்பட்டதில் ராஜா மற்றும் கருப்பையா இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நத்தம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு அனுமதியின்றி பட்டாசு வெடி தயாரித்தது தொடர்பாக காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதேபோல, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் வெடி தயாரித்த 2 பேர் வெடி விபத்தில் படுகாயம் அடைந்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications