ஆடு பலியிடப்பட்டது.. கழுத்தில் தொங்கிய அண்ணாமலை போட்டோ.. ரோட்டில் சம்பவம்.. தமிழ்நாடு பாஜக அதிர்ச்சி
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உள்ள கோயில் திருவிழா வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. ஏன்? என்ன காரணம்?
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ளது கருத்தலக்கம்பட்டி புதூர் என்ற கிராமம்.. இந்த கிராமத்தில் வடகாட்டான் கருப்புசாமி என்ற பழம்பெருமை வாய்ந்த கோயில் உள்ளது.

சிறப்புகள்: இந்த கோயிலில் பல நூற்றுண்டுகளாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாவும் நடத்தப்பட்டு வருகிறது. 3 வருடங்களுக்கு 1 முறை மட்டுமே நடத்தப்படும் திருவிழா என்பதால், இதற்கு நிறைய ஸ்பெஷாலிட்டிகள் உண்டு.
குறிப்பாக, முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே பங்கேற்றும் கோயில் திருவிழா இதுவாகும்.. எனவே, திருவிழா காலங்களின்போது, இந்த கோயிலிலிருந்து ஒரு கிலோமீட்டருக்கு முன்பாகவே பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டுவிடுவார்கள்.. கோயில் அருகில்கூட அவர்கள் வர அனுமதி கிடையாது.. எனவே, திருவிழா நேரங்களில் பெண் குழந்தை முதல் வயதான பாட்டி யாருமே பங்கேற்பதும் கிடையாது.
திருநீறு: அதேபோல, இந்த கோயிலின் திருநீறுகூட கோயிலை விட்டு வெளியே செல்ல அனுமதி கிடையாதாம். விபூதி மட்டுமல்ல, பூஜை செய்யப்பட்ட எந்த பொருட்களுமே கோயில் எல்லையைத் தாண்டி கொண்டு செல்லப்படுவதில்லை..
மிகவும் சக்தி வாய்ந்த கோயில் என்பதால், ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலில் திரண்டு வந்து வேண்டுதல் நடத்துவார்கள்.. ஆடுகள், அரிசி, காய்கறிகளை கொண்டு வந்து, நேர்த்திக் கடனாக கோயிலுக்கு வழங்குவார்கள்.. அந்தவகையில், 3 வருடம் கழித்து, கடந்த மே 28ம் தேதி இந்த கோயிலின் திருவிழா ஆரம்பமானது.. இதையடுத்து, ஒவ்வொரு நாளும் வடகாட்டான் கருப்புசாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தன..
திருவிழாவின் முக்கிய நிகழ்வான கறி விருந்து கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவு ஆரம்பமானது.. கிட்டத்தட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். அப்போது நேர்த்திக் கடனாக 200க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன.. ஆட்டுக்கறியில் விடிய விடிய கமகம குழம்பு தயாரானது.. அதேபோல, 300 மூட்டை அரிசியில் சாதம் தயாரானது.
கறிவிருந்து: பின்னர், திருவிழாவில் பங்கேற்ற வந்த அத்தனை ஆண்களுக்கும் கறிவிருந்து பிரசாதமாக பரிமாறப்பட்டது.. இதில், நத்தம், செந்துறை, சாணார்பட்டி, குட்டுபட்டி உள்ளிட்ட தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு திருவிழாவை சிறப்பித்தார்கள்.. இந்த கறிவிருந்து பிரசாதத்தை அனைவருக்குமே சேர்ந்து சாப்பிட்டார்கள்.
ஆனால், இந்த கறிவிருந்தில், ஆட்டுக்கறி அல்லது சாதம் மீதமாகிவிட்டால், இந்த கோயில் பகுதியிலே, குழியை தோண்டி புதைத்துவிடுவார்களாம்.. இந்த சடங்கும் இப்போதுவரை கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. மொத்தத்தில் இணையத்தில் வெளியாகி, காண்போருக்கு பரவசத்தை தந்துவருகிறது இந்த நத்தம் திருவிழா..!!












Click it and Unblock the Notifications