கொடைக்கானல் அருகே பரிதாபம்... கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் பலி
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொடைக்கானலின் மங்கலம் கொம்பில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. காமனூர் ஊராட்சி மன்ற தலைவராக இரண்டு முறை இருந்தவர் கணேஷன். இவர், சிறந்த ஊராட்சிக்கான விருதையும் பெற்றுள்ளார்.

கணேஷன், மனைவி பஞ்சவர்ணம் மற்றும் மகள் விஷ்ணுபிரியா ஆகிய மூன்று பேரும் வீட்டில் இருந்துள்ளனர். மகள் விஷ்ணுபிரியா திண்டுக்கல் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை அவரது வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தாண்டிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், இரவு முழுவதும் சிலிண்டரில் இருந்து கேஸ் வெளியேறியிருந்ததாகவும், காலையில் ரூம் ஹீட்டரை பயன்படுத்திய போது, சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications