கொடைக்கானல் லாட்ஜில் அலறிய பெண் வக்கீல்.. ஆடைகளை விலக்கி பாலியல் தொல்லை? காங்கிரஸ் தலைவர் கைது
திண்டுக்கல்: கொடைக்கானலில் லாட்ஜில் உடல் நிலை சரியில்லாமல் தங்கியிருந்த பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அப்துல்கனி ராஜா கைது செய்யப்பட்டிருக்கிறார். விசாரணைக்கு அழைத்து சென்ற போது அப்துல்கனி ராஜா மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்தவர் அப்துல்கனி ராஜா என்பவர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராவார். இவருக்கு கொடைக்கானல் நாயுடுபுரத்தில் சொந்தமான 2 தங்கும் விடுதிகள் இருக்கின்றன. அப்துல்கனி ராஜா கொடைக்கானல் ஓட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மே 7ம்தேதி சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் பெண் வக்கீல் ஒருவர் தனது 2 குழந்தைகள் மற்றும் தோழி, அவரது குழந்தைகளுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்திருக்கிறார். அவர் கொடைக்கானல் நாயுடுபுரத்தில் உள்ள அப்துல்கனி ராஜாவின் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.
உடல் நிலை பிரச்சனை: பெண் வக்கீல் தனது குழந்தைகளுடன் ஒரு அறையில் தங்கி இருந்துள்ளார். பெண் வக்கீலுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சுற்றுலா இடங்களை பார்க்க வெளியே செல்லவில்லை. அறையிலேயே தங்கி இருந்தார். அவரது குழந்தைகள், தோழி மற்றும் அவரது குடும்பத்தினர் சுற்றுலா இடங்களை பார்க்க சென்று விட்டார்கள்.
பாலியல் தொல்லை: இதனிடையே பெண் வக்கீல் தங்கியிருந்த அறையில் 'வைபை' வசதி செயல் இழந்து விட்டதாக அப்துல்கனி ராஜாவிடம் போன் செய்தார். இதன் மூலம் சிறிதுநேரத்தில் பெண் வக்கீல் தங்கியிருந்த அறைக்கு அப்துல்கனிராஜா வந்தார். அப்போது, உடல் நிலை சரியில்லாமல் இருந்த பெண் வக்கீலின் உடலை பரிசோதிப்பது போல அவரது ஆடைகளை விலக்கி அப்துல்கனி ராஜா பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதிர்ச்சி அடைந்த வக்கீல்: இதனால் அந்த பெண் வக்கீல் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அந்த அறையை காலி செய்து விட்டு வேறு தங்கும் விடுதிக்கு சென்றார். பின்னர் இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் பெண் வக்கீல் புகார் கொடுத்தார்.
அப்துல் கனி கைது: அதன்பேரில் கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல்கனி ராஜாவை கைது செய்தனர். அவரிடம், திண்டுக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
திடீரென மயக்கம்: விசாரணையை தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அப்துல்கனி ராஜாவை போலீசார் அழைத்து சென்றார்கள் அப்போது போலீஸ் நிலைய வாசலிலேயே அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனைக்கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து போலீசார் மற்றும் உறவினர்கள், அப்துல்கனி ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
15 நாட்கள் காவல்: பின்னர் சிகிச்சைக்கு பின்னர் அப்துல் கனி கோர்டில் ஆஜர்படுத்தினார். அப்போது அப்துல் கனியினை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி கார்த்திக் உத்தரவிட்டார். அதன்பேரில், திண்டுக்கல் மாவட்ட சிறையில் அப்துல்கனிராஜா அடைக்கப்பட்டார். பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications