தினுசு தினுசா.. திண்டுக்கல்லில் 'பஸ் ஸ்டாண்ட் கொள்ளையர்கள்'- கூலி தொழிலாளிக்கு சரமாரி கத்தி குத்து!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கொலை முயற்சி, கொலைகள் தொடரும் நிலையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கூலி தொழிலாளியை சரமாரியாக கத்தியால் குத்தி கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அச்சமூட்டும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. திண்டுக்கல் திமுக பிரமுகர்கள் மீரான் பாய், விஜயராஜ் ஆகியோர் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டப்பட்டனர்.

கொலை முயற்சி 5 பேர் கைது
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக முன்னாள் பெண் கவுன்சிலரின் கணவர், மகன் உள்ளிட்ட 5 பேர் சிக்கி உள்ளனர்.

நிர்மலா தலை துண்டிப்பு- 3 பேர் கைது
இதனைத் தொடர்ந்து தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிர்மலா தேவி வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது தலை துண்டிக்கப்பட்டு 1 கி.மீ. தொலைவில் உள்ள நந்தவனப்படி பசுபதி பாண்டியன் வீடு முன்பாக போடப்பட்டிருந்தது. இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமந்தராயன் கோட்டை கொலை
திண்டுக்கல் நிர்மலா தேவி கொல்லப்பட்ட நேற்று முன்தினம் இரவு அனுமந்தர்ராயன் கோட்டை ஸ்டீபன் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது தலையும் துண்டிக்கப்பட்டு பேருந்து நிலையத்தில் வீசப்பட்டது. அவரது உடலை மட்டப்பாறை அருகே கொலையாளிகள் வீசி சென்றனர். இப்படி திண்டுக்கல் மாவட்டமே கொலைகளின் நகரமாகுகிறதோ என பொதுமக்கள் அச்சப்படும் வகையில் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றனர்.

பஸ் ஸ்டாண்ட் கொள்ளையர்கள்
இந்நிலையில்தான் பஸ் ஸ்டாண்ட் கொள்ளையர்கள் கூலி தொழிலாளி ஒருவரை பரபரப்பாக இருக்கும் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையிலேயே கத்தியால் குத்தி கொள்ளையடிக்க முயன்றிருக்கின்றனர். புதுக்கோட்டை பொன்னமராவதியை சேர்ந்த ஹோட்டல் கூலி தொழிலாளி முத்து கணேசன் (34). வேடசந்தூரில் ஹோட்டல் ஒன்றில் வேலையை முடித்துவிட்டு பொன்னமராவதி செல்வதற்காக திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு நேற்று வந்துள்ளார். முத்துகணேஷ் செல்லக் கூடிய பொன்னமராவதி பேருந்து வர தாமதம் ஏற்பட்டதால் அவர் பேருந்துக்காக காத்திருந்தார். இதனை நோட்டமிட்ட பஸ் ஸ்டாண்ட் கொள்ளையர்கள், அவரை சரமாரியாக கத்தியால் குத்தி பணம் பறிக்க முயன்றுள்ளனர். முத்துகணேஷ் தான் வைத்திருந்த செல்போன் மற்றும் உடைகளை அப்படியே போட்டுவிட்டு உயிருக்கு பயந்து ஓட்டம் பிடித்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் கூச்சலிட்டதால் பஸ் ஸ்டாண்ட் கொள்ளையர்கள் இருவரும் தப்பி ஓட்டம் பிடித்தனர். மேலும் படுகாயங்களுடன் முத்துகணேஷ் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications