கண்ணீரில் தவிக்கும் வயநாடு! மக்களுக்கு உதவ களமிறங்கும் இளைஞர்கள்! திண்டுக்கல்லில் மொய்விருந்து..!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: இந்தியா முழுவதுமே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது வயதாகிறது 380-க்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை ஈந்திருக்கும் நிலையில் உதவிக்கரங்கள் நீண்டு வருகிறது. இந்த நிலையில் வயநாடு மக்களுக்கு உதவுவதற்காக திண்டுக்கல்லில் மொய் விருந்து நடத்த இருப்பதாக அறிவித்திருக்கிறது பிரபல உணவகம் ஒன்று..

கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த வாரம் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக வயநாட்டில் உள்ள முண்டகாயம், சூரல்மாலா ஆகிய இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

Dindigul Wayanad Landslide

திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மீது மண், பாறைகள், மரங்கள் ஆகியவை விழுந்தன. இதில் சிக்கி 380க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் படுகாயங்களுடன் 250க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

அதே நேரத்தில் மேலும் நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கும் நிலையில் காணாமல் போனவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியில், கேரளா தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் , உள்ளூர் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் இடிபாடிகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்து வருகின்றனர்.

மீட்கப்பட்ட உடல்கள் மற்றும் உடல் பாகங்களை அடையாளம் காணும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது சில இடங்களில் மனித உடல் பாகங்கள் மட்டும் கிடைத்திருக்கும் நிலையில் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அவற்றை அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 50க்கும் மேற்பட்ட டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதுவரை 220 உடல்கள், 166 முதல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் 350 உடற்கூராய்வுகள் நடைபெற்று இருப்பதாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் மீனாட்சி தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே சூரல் மலைப்பகுதியில் மண்ணில் புதைந்துள்ள உடல்களை தேடி கண்டுபிடிக்க ட்ரோன்களும் களம் இறக்கப்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல்களை கண்டறியும் பணி நடைபெறுகிறது. வயநாட்டில் பெரும் நிலச்சரிவில் சிக்கி பலரும் உயிர்களையும் உடைமைகளையும் இழந்து இருக்கும் நிலையில் அவர்களுக்கு உதவிக் கரம் மீண்டும் வருகிறது தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டிருக்கிறது. இது மட்டும் அல்லாமல் நடிகர்கள், நடிகைகள், பிரபலங்கள் தன்னார்வலர்கள் என பலரும் வயநாட்டிற்கு நிதி உதவி அளித்து வருகின்றனர்.

அது மட்டும் அல்லாமல் உணவுப் பொருட்களாக தமிழகத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் எடுத்துச் சென்று அங்குள்ள மக்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்த நிலையில் வயநாடு மக்களுக்கு உதவுவதற்காக திண்டுக்கல்லில் மொய் விருந்து நடத்த இருப்பதாக அறிவித்திருக்கிறது பிரபல உணவகம் ஒன்று. மிகவும் கஷ்டப்படும் சூழலில் இருக்கும் நபர்களுக்கு மொய் விருந்து நடத்தி உதவுவது வழக்கம்.

அப்படி ஒரு முன்னெடுப்பை எடுத்து இருக்கின்றனர் திண்டுக்கல்லை சேர்ந்த முஜீப் பிரியாணி நிர்வாகத்தினர். வரும் புதன்கிழமை இரவு 8:00 மணி முதல் 10 மணி வரை அந்த உணவகத்தில் மொய் விருந்து நடைபெறும் எனவும் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்க வேண்டாம் அதற்கு பதிலாக இலைக்கு அடியில் பத்து ரூபாயாக இருந்தாலும் பத்தாயிரம் ரூபாயாக இருந்தாலும் வைத்து செல்லலாம். அந்த நிதி வயநாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அந்த உணவகத்தின் உரிமையாளர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்த கொரோனா காலத்தின் போது, இந்த உணவகம் சார்பில் தினமும் நூற்றுக்கணக்கானோருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மொய் விருந்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+