Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டுக்கல் தங்க நகை அடகு கடையில் ட்விஸ்ட்.. ஒரே நபர்.. எத்தனை முறை சார்.. போலீசும் பாவம்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சாணார்பட்டியை அடுத்த கோணப்பட்டி பகுதியில் கடந்த 3 நாட்களாக ஒடிசா மாநில வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்து பொதுமக்கள் அவரை காவல் நிலையத்தில் பிடித்து ஒப்படைத்தனர். அவர் உணவு இல்லாமல் பசியோடு சுற்றியுள்ளார். அவருக்கு உணவு வாங்கி கொடுத்து அனுப்பி வைத்தனர். ஆனால் அடகு கடை வாசலில் படுத்துள்ளார். அப்போதும் சந்தேகத்தில் பொதுமக்கள் அவரை விரட்டினார்கள். இதனால் அவர் எடுத்த முடிவு போலீசாரை ஆடிப்போக வைத்துள்ளது.

மக்கள் வடமாநிலத்தவர் சந்தேகத்திற்கு இடமாக சாலைகளில் சுற்றினால் சிலநேரங்களில் அடிக்கிறார். திருட வந்ததாக நினைத்து விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைக்கிறார்கள். அப்படித்தான் திண்டுக்கல்லில் வேலையில்லாமல், பசியால் வாடிய ஒடிசா நபரை இரண்டு முறை போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

A twist in the Dindigul gold jewellery pawn shop case Who is that young man from Odisha

திண்டுக்கல் அருகே சாணார்பட்டியை அடுத்த கோணப்பட்டி பகுதியில் கடந்த 3 நாட்களாக வடமாநில வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அவரை பிடித்து சாணார்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கோவிந்த கல்சா (வயது 35) என்பதும், வேலை தேடி திருப்பூருக்கு வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

திருப்பூரில் கோவிந்த கலசாவிற்கு வேலை கிடைக்காததால் பேருந்தில் திண்டுக்கல் வந்து, பின்னர் கோணப்பட்டி பகுதிக்கு வந்ததும் தெரியவந்தது. அங்கு வேலை மற்றும் உணவு இல்லாமல் சுற்றி திரிந்துள்ளார். கடந்த ஜூன் 1ம் தேதி அவருக்கு சாணார்பட்டி போலீசார் உணவு வாங்கி கொடுத்து பஸ்சில் அனுப்பி வைத்துள்ளார்கள். ஆனால் அவர் ஊருக்கு செல்லாமல் அப்பகுதி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அடகு கடை முன் இரவு படுத்துள்ளார்.நேற்று காலை அவரைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் திருட வந்ததாக நினைத்து விரட்டியுள்ளார்கள்.

இதனால் பயந்து போன அந்த நபர் அவர்களிடமிருந்து தப்பித்து மீண்டும் சாணார்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார் அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென அவர், போலீஸ் நிலையத்தின் மாடிப்படி வழியாக மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கே நின்று கொண்டு கீழே குதிக்க போவதாக மிரட்டினாா். போலீசார் அவரை கீழே இறக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை.

இதனால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு பெரிய தார்ப்பாயை விரித்து பிடித்துக்கொண்டு காத்திருந்தனர். ஒரு வழியாக அந்த நபரிடம் இந்தியில் பேசி கீழே இறங்கி வரச்செய்தனர். பின்னர் அவரை திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்து, கையோடு ஈரோடு ரயிலில் ஏற்றிவிட்டு, அங்குள்ள காவலர்கள் உதவியுடன் ஒடிசா செல்லும் ரயிலில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+