Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்தடுத்து திமுகவுக்கு தாவும் அதிமுக வேட்பாளர்கள்..கடைசி நேர தலைவலியால் கலக்கத்தில் கழகம்..!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி,நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் கொத்து கொத்தாக கடைசி நேரத்தில் திமுகவுக்கு தாவி வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு மிகக் குறுகிய இடைவெளியில் உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல் நகராட்சி, எரியோடு, ஆத்தூர், நத்தம், வடமதுரை உள்ளிட்ட பேரூராட்சிகளுக்கும் நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சி

திண்டுக்கல் மாநகராட்சி

திண்டுக்கல் மாநகராட்சியை பொருத்தவரை 48 வார்டுகள் உள்ள நிலையில், இருபத்தி ஐந்து இடங்களில் தனிப் பெரும்பான்மை பெறும் கட்சி அல்லது கூட்டணி கட்சிகளும் மேயர் பதவியையும் துணை மேயர் பதவியை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாகவே திண்டுக்கல் மாநகராட்சியில் அதிமுக நாற்பத்து ஏழு இடங்களிலும் திமுக முப்பத்தி மூன்று இடங்களிலும் தனிப்பெரும்பான்மை பெற முயற்சித்து போட்டியிடுகின்றன. எப்படியாவது தனிப் பெரும்பான்மை பெற்று பதவியை கைப்பற்ற வேண்டும் என இரு கட்சிகளும் தீவிரமாக முயன்று களத்தில் பணியாற்றி வருகின்றனர். இதேபோல் நகராட்சி, பேரூராட்சிகளை கைப்பற்றவும் தீவிர போட்டி ஏற்பட்டுள்ளது.

திமுகவுக்கு தாவும் வேட்பாளர்கள்

திமுகவுக்கு தாவும் வேட்பாளர்கள்

நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் கடைசி நேரத்தில் காலை வாருவது போல அடுத்தடுத்து அதிமுக வேட்பாளர்கள் திமுகவுக்கு தாவி வருவது திண்டுக்கல் மாவட்ட அதிமுகவினர் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. நேற்று முன்தினம் திண்டுக்கல் மாநகராட்சி 1வது வார்டு பகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்துப்பாண்டி திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ பெரியசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சங்கிலித் தொடர் போல அடுத்தடுத்து அதிமுகவினர் திமுகவுக்கு தாவி வருகின்றனர்.

அதிமுக வேட்பாளர்

அதிமுக வேட்பாளர்

திண்டுக்கல் 26 வது வார்டு அதிமுக வார்டு துணை செயலாளர் காளையன் கார்த்திக், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட 25க்கும் மேற்பட்டோர் உடன் அதிமுகவிலிருந்து விலகி கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் திமுகவில் இணைந்தனர். இந்த நிலையில் ஒட்டன்சத்திரம் 1-வது வார்டு அதிமுக வேட்பாளரான சரண்யா நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். ஏற்கனவே ஒரு ஒட்டன்சத்திரம் அதிமுக வேட்பாளர் திமுகவில் இணைந்த நிலையில் தற்போது இரண்டாவதாக மற்றொரு அதிமுக வேட்பாளர் திமுகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவினர் அதிர்ச்சி

அதிமுகவினர் அதிர்ச்சி

இதேபோல எரியோடு பேருராட்சி இரண்டாவது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான மணிவேல் என்பவர் அதிமுக கிளை கழக செயலாளர் உடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீரென திமுகவில் இணைந்துள்ளார். வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் முன்னிலையில் மணிவேல் உள்ளிட்ட அதிமுகவினர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். வேட்பாளர் தேர்வு, வேட்புமனுத்தாக்கல், பிரச்சாரம் என அனைத்து நாட்களிலும் அதிமுகவில் இருந்து வந்த அதிமுகவினர் கடைசி நேரத்தில் திமுகவுக்கு தாவி வருவது அதிமுகவினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+