பள்ளிக்கு போகாமல் பாட்டு பாடினாரா.. ஆசிரியை மீதான குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் பொய்!
ஆசிரியை முத்துலட்சுமி மீது கூறிய குற்றச்சாட்டுகள் எல்லாமே பொய் என தெரியவந்துள்ளது.
Recommended Video

திண்டுக்கல்: ஸ்கூலுக்குகூட போகாமல் வீட்டில் உட்கார்ந்து பாட்டு பாடிகொண்டே இருக்கிறார் என்று பள்ளி ஆசிரியை முத்துலட்சுமி மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய்யானவை என தற்போது தெரியவந்துள்ளது.
வேடசந்தூர் அடுத்துள்ள ஊர் அழகாபுரி. இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் டீச்சராக வேலை பார்த்து வருபவர் முத்துலட்சுமி.

பரபரப்பு வீடியோ
இவருக்கு பாட்டு பாடுவது மிகவும் பிடிக்கும் என்பதால், செல்போனில் வீடியோவை ஆன் செய்தும், ஸ்மியூல் ஆப்பை தேர்ந்தெடுத்து அதில் பாடல்களை பாடி பதிவிட்டு வருவதாகவும், பள்ளிக்கு சரியாக போவதில்லை என்றும் செய்திகள் பரவின. குறிப்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான வீடியோ மற்ற மீடியாக்களிலும் வர ஆரம்பித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

விசாரணைக்கு உத்தரவு
இந்த தகவல் முதன்மை கல்வி அலுவலர் காதுக்கு எட்ட, இது சம்பந்தமாக மாவட்ட கல்வி அதிகாரி பிச்சைமுத்து, மற்றும் வட்டார கல்வி அலுவலர் பிரபாகரனை அழைத்து இதுகுறித்து உடனடியாக விசாரணை செய்யும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி பிரபாகரன், பிச்சைமுத்து இருவரும் நேரிடையாக குறிப்பிடப்பட்ட அந்த பள்ளிக்கு சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
வீண் பழி
அப்போது ஆசிரியை முத்துலட்சுமி குறித்து சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், இப்படிஒரு சம்பவமே எதுவும் நடக்கவில்லை என்றும் ஆசிரியர் மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எல்லாமே பொய்
இதுகுறித்து மாவட்ட கல்வி துறை அதிகாரி பிச்சைமுத்து, செய்தியாளர்களிடம் பேசும்போது, "தனியார் தொலைக்காட்சியில் ஆசிரியை முத்துலட்சுமி மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு உண்மைக்கு புறம்பானது. எனவே இப்போது பள்ளியில் நடத்தப்பட்ட விசாரணை குறித்து மேலதிகாரிகளிடம் சமர்ப்பிக்க இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications