3 அமைச்சர்கள் நின்றதால் வந்த பதற்றம்! உனக்கெல்லாம் யாருய்யா டிரெய்னிங் கொடுத்தது? எ.வ.வேலு சிடுசிடு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தோமையார்புரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்ற மரம் நடும் விழாவில், சாலை பணியாளரை பார்த்து உனக்கெல்லாம் யாருய்யா டிரெய்னிங் கொடுத்தது? என அமைச்சர் எ.வ.வேலு கோபத்தை கொட்டித் தீர்த்தார்.
பொதுவிடங்களில் நாவடக்கத்துடன் பேசுமாறும், கவனத்துடன் கண்ணியமாக நடந்துகொள்ளுமாறும் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எத்தனையோ முறை அறிவுரை வழங்கிவிட்டார். இருப்பினும் ஒரு சில அமைச்சர்கள் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கித் தான் வருகின்றனர்.

கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும், இதனால் மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் என்ற இலக்கு எட்டப்படும் என்றும் 2023-2024ஆம் ஆண்டு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, கருணாநிதி நூற்றாண்டு விழா தொடக்க நாளான கடந்த ஜூன் 7ஆம் தேதி அன்று முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை மரக்கன்று நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.
24 மாத காலம் வளர்ச்சிக் கொண்ட மகிழம், வேம்பு, புளியன், புங்கன், நாவல், சரக்கொன்றை வகையைச் சார்ந்த சுமார் 46,410 மரக்கன்றுகளை பருவமழைக்கு முன்பாகவே நடுவதற்கு திட்டமிட்டுள்ளார் அமைச்சர் எ.வ.வேலு. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் தோமையார்புரத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சக்கரபாணி, ஐ.பெரியசாமி, என மூன்று அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார், உட்பட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மரக்கன்று நட்டபிறகு மண் சட்டியை அமைச்சர் கையில் எடுத்துக் கொடுப்பதற்கு பதில் அங்கிருந்த சாலைப் பணியாளர் பதற்றத்தில் உரச்சட்டியை அமைச்சர் கையில் எடுத்துக் கொடுத்தார்.
இதனால் டென்ஷன் ஆன அமைச்சர் எ.வ.வேலு, உனக்கெல்லாம் யாருய்யா டிரெய்னிங் கொடுத்தது என அந்தப் பணியாளரிடம் கடுகடுப்பு காட்டினார். ஆனால் அமைச்சர் ஐ.பெரியசாமியோ எப்போதும் போல் கூலாக நின்று அமைச்சர் வேலுவையும் கூலாக்கினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications