கமல் மீட்டிங்கில் செம்ம அடி.. திண்டுக்கல்லையே தெறிக்கவிட்ட மக்கள் நீதி மய்ய பிரச்சாரம்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேண்ட் வாத்தியக் கலைஞர்களுக்கு இடையே யார் நன்றாக வாசிப்பார்கள் என்று நடந்த போட்டியில் ஒரு கட்டத்தில் மோதல் ஏற்பட்டது. பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதுடன் பேண்ட் வாத்தியங்கள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended Video

    மக்கள் நீதி மைய மீட்டிங்கில் பேண்ட் வாத்தியக் கலைஞர்களுக்கு இடையே நடந்த மோதல் - வீடியோ

    வடிவேலு ஒரு திரைப்படத்தில் காமெடிக்காக இரு வாத்தியக்குழுக்கள் இடையே யார் வாத்தியம் சிறந்தது என்று கேட்டு அடிச்சுக்காட்டு என்பார். அதன்படி அடித்துக்காட்டும் குழுவினர் கடைசியல் மோதிக்கொள்வார்கள். கொஞ்சநேரத்தில் அந்த இடமே போர்க்களமாக மாறிவிடும். '

    அப்படித்தான் திண்டுக்கல் நகரில் மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேண்ட் வாத்தியக் கலைஞர்களுக்கு மோதல் ஏற்பட்டது.

    திண்டுக்கல் பிரச்சாரம்

    திண்டுக்கல் பிரச்சாரம்

    தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை ஒட்டி மக்கள் நீதி மைய கட்சி தலைவர் நடிகர் கமலஹாசன் தமிழகம் முழுவதும் தற்போது பொதுமக்களை சந்தித்து வருகிறார். நேற்று மதுரையில் பிரச்சாரத்தை தொடங்கிய கமல், அப்படியே தேனி நகருக்கு வந்தார். பின்னர் திண்டுக்கல் சென்றார்.

    வாசித்த கலைஞர்கள்

    வாசித்த கலைஞர்கள்

    திண்டுக்கல்லில் தனியார் மகாலில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து கலந்தாய்வு நிகழ்ச்சியை கமல்ஹாசன் நடத்தினார். அதில் கமல்ஹாசனை வரவேற்பதற்காக பேண்ட் வாத்தியங்கள் மக்கள் நீதி மைய கட்சியின் சார்பாக திண்டுக்கல் பகுதியை சேர்ந்த பேண்ட் வாத்திய கலைஞர்களை ஏற்பாடு செய்தார்கள். அவர்கள் மண்டபத்தின் நுழைவாயிலில் வாசித்து வந்தனர் அதேபோல் கமலஹாசன் மண்டபத்துக்குள் வரும் வழியில் பழனியைச் சேர்ந்த பேண்ட் வாத்தியக் கலைஞர்களும் வாசித்து வந்தனர்.

    நீயா நானா

    நீயா நானா

    இந்நிலையில் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வெளியே சென்ற பின்னர் இரண்டு பேண்ட் வாத்தியக் கலைஞர்களும் பொதுமக்கள் முன்னிலையில் நீயா நானா என போட்டி போட்டு பேண்ட் வாசித்தார்கள்.

    யார் பெரிய ஆள்

    யார் பெரிய ஆள்

    ஒருகட்டத்தில் நடிகர் வடிவேலு காமெடி போது யார் பெரிய ஆள் யார் நல்ல வாசிப்பார்கள் என்று அவர்களுக்குள் ஏற்பட்ட போட்டியில் கைகலப்பு ஏற்பட்டது. பேண்ட் வாத்தியங்கள் உடைக்கப்பட்டன. உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் வாத்தியக்குழுவினரை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினார் பேண்ட் வாத்தியங்கள் உடைக்கப்பட்டு மோதல் ஏற்பட்டதால் கமலின் நிகழ்ச்சி நடந்த இடம் போர்க்களம் போல் ஆனது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+