திண்டுக்கல்லே திணறிப் போச்சு.. மாஸாக எண்ட்ரி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்! பட்டைய கிளப்பும் திட்டங்கள்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: ஒரு நாள் பயணமாக திண்டுக்கல் வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மதுரையிலிருந்து திண்டுக்கல் வரை வழிநெடுக ஆயிரக்கணக்கான திமுகவினர் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து 337 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 174 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். மேலும் ஆயிரம் கோடியே 10 ஆயிரம் கோடியே 82 லட்சத்து 86,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது தமிழக முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டம் திண்டுக்கல்லுக்கு இன்று வருகை தந்தார்.

முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். இதனை தொடர்ந்து இன்று காலை மதுரையில் இருந்துசாலை மார்க்கமாக திண்டுக்கல் வந்தடைந்தார்.

mk Stalin Dindigul i periyasamy

முதல்வர் ஸ்டாலின்

திண்டுக்கல் மாவட்ட எல்லையான பாண்டியராஜபுரம் பகுதியில் அமைச்சர்கள் ஐ பெரியசாமி, சக்கரபாணி தலைமையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து திண்டுக்கல் மதுரை நான்கு வழிச்சாலையில் வழிநெடுக முதல்வருக்க்கு திமுகவினர், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு முதல்வர் வருகை தந்தார்.

திண்டுக்கல் சுற்றுப்பயணம்

தொடர்ந்து ஆட்சியர் வளாகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு புதிய வழித்தடங்களில் 61 அரசு பேருந்துகள் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி திறந்த வைத்தார். பின்னர் விழா மேடையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பள்ளிக்கல்வித்துறை உட்பட 337. 64 கோடி மதிப்புள்ளான 111 கட்டிடங்களை திறந்து வைத்தார்.

நலத்திட்ட உதவிகள்

மேலும், தமிழக இந்து அறநிலையத் துறை, மின்சாரம், வருவாய்த்துறை உள்ளிட்ட ஏழு துறைகளை சார்ந்த 174.20 கோடி மதிப்பிலான 212 புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், விழா மேடையில் வருவாய் துறை உள்ளிட்ட 18 துறைகள் மூலம் 2 லட்சத்து2, 62,864 பயனாளிகளுக்கு ரூபாய் 1000 கோடியே 82 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாப் பேருரையாற்றினார்.

உற்சாக வரவேற்பு

முன்னதாக திண்டுக்கல் மதுரை நான்கு வழி சாலையில் வழிநெடுக கொடைரோடு, சின்னாளப்பட்டி, திண்டுக்கல் பைபாஸ் சாலை ஆகிய இடங்களில் திரண்டு இருந்த ஏராளமான திமுகவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினை உற்சாகத்துடன் வரவேற்றனர். முதல்வர் வருகையை ஒட்டி திண்டுக்கல் டிஐஜி சாமிநாதன் மற்றும் எஸ்பி பிரதீப் தலைமையில் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

பொதுமக்களுக்கு ஏற்பாடுகள்

முதல்வர் வருகையை ஒட்டி திண்டுக்கல் பகுதியில் ட்ரோன்கள் பறக்க மாவட்ட ஆட்சியர் சரவணன் தடை விதித்திருந்தார். மேலும் சுகாதாரத்துறை சார்பில், விழா நடைபெறும் பகுதியில் 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளது. அதேபோல் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்காக ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் மற்றும் தற்காலிக கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி முடிந்தது சாலை மார்க்கமாக மதுரை சென்றமுதல்வர் ஸ்டாலின், விமானம் மூலமாக சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+