பழனி கோவிலில் நடந்த அதிசயம்.. அள்ள அள்ள தங்கம், கட்டுக்கட்டாக பணம்! பரவசத்தில் ஆழ்த்திய பக்தர்கள்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அருள்மிகு பழநி தண்டாயுதபாணி சுவாமி மலை கோயிலில் இன்று நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் 5 கோடியே 50 இலட்சத்து 94 ஆயிரத்து 743 ரூபாய் பணத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும், வெளிநாட்டு கரன்சிகள் 1069 நோட்டுகள் கிடைத்துள்ளது. உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக தங்கம் 1,547 கிராமும், வெள்ளி 31 ஆயிரத்து 94 கிராமும் கிடைத்துள்ளது. மேலும், பல்வேறு நாட்டு கரன்சி நோட்டுகள் 1,207 என்ற எண்ணிக்கையிலும் கிடைத்துள்ளன.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவர்.

இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவிலின் அடிவாரம் முதல், கடைகள், பாதுகாப்பு, துப்புரவு பணி என அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை மூலமே மேற்கொள்ளப்படுகிறது.
பொதுவாக வெள்ளி, சனி ,ஞாயிறு தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் மின் இழுவை ரயில் ,ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், கார்த்திகை, கந்த சஷ்டி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதெல்லாம் நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரள்வார்கள்.
அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிறிய மற்றும் பெரிய உண்டியல்களில் தங்கள் காணிக்கைகளை செலுத்துகின்றனர். பணமாகவும் தங்கம் வெள்ளி நகைகளாகவும் மற்றும் பிற பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த பணமானது மாதம் ஒருமுறை அல்லது நிரம்பும் போது எண்ணப்படுவது வழக்கம்.
பழனி மலையில் உள்ள திருக்கோயில் வளாகத்தில் கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்கள் வங்கி ஊழியர்கள் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் இந்த மாதம் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலை மீது நடைபெற்றது. உண்டியல் எண்ணிக்கையில் வங்கி ஊழியர்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், கல்லூரி பேராசியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இந்த மாதம் உண்டியல்கள் அனைத்தும் பக்தர்கள் செலுத்திய காணிக்கையால் நிரம்பியது. இதையடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. உண்டியல் எண்ணிக்கை முடிவில் பக்தர்களின் காணிக்கை வரவாக ரொக்கம் 5 கோடியே 50 லட்சத்து 94 ஆயிரத்து 743 ரூபாய் கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அதன்படி தங்கம் 1547 கிராமும், வெள்ளி 31 ஆயிரத்து 94 கிராமும் கிடைத்தது. மேலும், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சி நோட்டுகள் 1,207ம் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications