திண்டுக்கல்: பேரன் வயது 3-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் டார்ச்சர்.. கம்பி எண்ணும் 67 வயது 'பெருசு'!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே 3-ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பாலியல் தொல்லை தந்ததாக 67 வயது முதியவ்ர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 3-வது வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு தந்த முதியவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா, எரியோடு பேரூர் பகுதியைச் சேர்ந்த 3-வது வகுப்பு படிக்கும் 8 வயது மாணவன் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தான். அந்த சிறுவனின் முகம், வாய் வீக்கமாகவும் இருந்தது; அத்துடன் தொடர் காய்ச்சலில் அந்த சிறுவன் அவதிப்பட்டும் வந்தான்.

இது தொடர்பாக மாணவனிடம் அவனது பள்ளி ஆசிரியை விசாரித்து இருக்கிறார். இந்த விசாரணையின் போதுதான் 67 வயது பெரியவர் தம்மை பாலியல் ரீதியாக கொடூரமாக சித்திரவதை செய்ததை கண்ணீருடன் விவரித்திருக்கிறான். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தந்தார்.
இந்த தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், எரியோடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் போது எரியோடு அருகே உள்ள மொங்காம்பட்டி என்ற மொங்குபெத்தன்பட்டியைச் சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவர் பள்ளிக்கு செல்லும் வழியில் காத்திருந்து தமக்கு பாலியல் தொல்லை தந்த விவரத்தை உறுதிபடத் தெரிவித்தான் அந்த சிறுவன்.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மொங்குபெத்தான்பட்டியைச் சேர்ந்த 67 வயது முதியவர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது பாதிக்கப்பட்ட மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியில் பள்ளிக்கூட மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து முதியவர் ஒருவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசு பேருந்தில் கஞ்சா
இதனிடையே திண்டுக்கல்- கரூர் மாவட்ட எல்லையான கல்வார்பட்டியில் அரசு பேருந்தில் கஞ்சா கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர். திருச்செந்தூரில் இருந்து ஈரோடு சென்ற அரசு பேருந்தில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது கஞ்சா மூட்டைகள் சிக்கின. இந்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் நகரைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications