காசு கேட்டு போனை போட்ட கலெக்டர்..ஆடி போன அதிகாரிகள்! ஆனால் மேட்டரே வேற..எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க
திண்டுக்கல்: டிஜிட்டல் அரெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு மோசடி சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வரும் நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி சிலர் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சிப்பதாக புகார் எழுந்திருக்கிறது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு துறைகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பணம் கேட்டு தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே நாளுக்கு நாள் பண மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சிபிஐ, கஸ்டம்ஸ் அதிகாரிகள் போல் பேசி உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்து இருக்கிறோம் உடனடியாக உங்கள் வங்கி கணக்கு விபரங்களை சொல்லுங்கள் என மிரட்டி மோசடி செய்து வருகின்றனர் சைபர் கிரைம் குற்றவாளிகள்.
அதுமட்டுமல்லாமல் ஏடிஎம் மோசடி, பார்சல் மோசடி, உறவினர்கள் போல் பேசி பணம் கேட்பது என டிசைன் டிசைனாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தன் பெயரிலேயே மோசடி நடப்பதாகவும் அதிகாரிகள் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறியிருக்கிறார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரான சரவணன்.

கடந்த சில தினங்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரக ஊழியர்களுக்கு தொலைபேசி அழைப்புகளும், வாட்ஸாப் மெசேஜ்களும் வர தொடங்கியது. அதில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் புகைப்படம் இருந்த நிலையில் உடனடியாக தனக்கு பணம் தேவைப்படுகிறது என கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த புகார் ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் தன் பெயரை அல்லது புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி செய்யும் நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன். இதுதொடர்பாக பேசிய அவர்," எனது புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் வைத்து மோசடியில் ஈடுபட முயன்ற கும்பல் குறித்து அலுவலர் ஒருவர் மூலம் புகார் வரப்பட்டது. இத்தகவல் தெரிந்தவுடன் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் அந்த செல்போன் நம்பரை சைபர் கிரைம் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து அறிக்கையை அலுவலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு இன்று காலை வெளியிட்டுள்ளோம். ஆட்சியர் மட்டும் இல்லை. சைபர் கிரைம் சம்பந்தமாக பல குற்றங்கள் நடைபெற்று வருகிறது. இது குறித்து காவல்துறையினரும் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற பலரின் புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவதை தடுப்பதற்கும், ஒரு வேலை தவறு நடைபெற்றாலும் கவனத்திற்கு கொண்டுவர கூறியுள்ளோம்.
எனது புகைப்படத்தை பயன்படுத்தி ஒரு நம்பர் மூலம் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வருவதாக , நேற்று 3 அலுவலர்கள் தெரிவித்திருந்தனர். மேலும், அந்த நம்பரை காவல்துறையினர் ஆய்வு செய்த போது, அது லாவோஸ் என்ற நாட்டின் தொலைபேசி எண் என்பது அதன் மூலம் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வந்துள்ளது. அந்த தொலைபேசி எண்ணை காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சைபர் கிரைம் குற்றங்கள் பல்வேறு இடங்களில் தற்போது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்." என்றார்.
-
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications