என்ன ஒரே கஞ்சா நாத்தமா இருக்கு..பூட்டிய அறையில் ’தம்மு’ கிசா! கொடைக்கானலில் சிக்கிய லாட்ஜுக்கு சீல்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலின் பல பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுகிறது. அது மட்டுமல்லாமல் போதை காளான், கஞ்சா ஆகியவை விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த நிலையில் தங்கும் விடுதியில் கஞ்சா பயன்படுத்தப்பட்ட சம்பவமும், அதனைத் தொடர்ந்து அந்த விடுதிக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவமும் சுற்றுலாப் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.

இயற்கை சூழ்ந்த பகுதிகளை கண்டு ரசிப்பதோடு அங்கேயே தங்கி இருந்து விடுமுறையை கழித்து வருகின்றனர். கொடைக்கானல் மலைப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி இருப்பதால் எப்போது குளுமையான சூழல் நிலவுகிறது.
இதனால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலை நோக்கி பயணித்து வருகின்றனர். அதே நேரத்தில் போதைக்கு விருப்பப்பட்டு வரும் பயணிகளை குறி வைக்கும் கும்பலின் நடமாட்டமும் அதிகமாக இருக்கிறது. பல பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுகிறது. அது மட்டுமல்லாமல் போதை காளான், கஞ்சா ஆகியவை விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து கொடைக்கானலில் மலைப் பகுதிகளில் அடிக்கடி வனத்துறையினரும் காவல்துறையினரும் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை கும்பலை பிடிக்க தீவிர ரோந்து பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் அவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக சில தங்கும் விடுதி நிர்வாகங்களே நேரடியாக சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் போதை காளான் விற்பனையும் நடைபெற்று வருவதாகவும், மேலும் மெத்தப்பட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் தங்கும் விடுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்ட சம்பவமும் அதனைத் தொடர்ந்து அந்த விடுதிக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவமும் சுற்றுலாப் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொடைக்கானல் வட்டகானல் பகுதியில் உள்ள இயற்கை அழகை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள அனுமதி பெறாமல் இயங்கி வரும் தங்கும் விடுதிகளில் போதை வஸ்துக்கள் அதிகம் புழக்கத்தில் இருந்து வருவதாக தொடர்ந்து புகார் வந்த நிலையில் , இன்று கோட்டசியர் தலைமையில் பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் இதே பகுதியை சேர்ந்த பாலா 45 என்பவர் தங்கும் விடுதியை சோதனை செய்த போது அங்கு கஞ்சா, போதை மாத்திரைகள் ஆகியவை வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் 30kகும் மேற்பட்ட மதுபானம் வைத்திருந்ததும் தெரியவந்தது. அதே போல அருகில் உள்ள மற்றும் ஒரு தங்கும் விடுதியும் சோதனை செய்தனர். இதில் சென்னையை சேர்ந்த 12 இளைஞர்கள், பெங்களூரை சேர்ந்த 6 ,மொத்தம் 18 பேரை காவல்துறையினர் விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த இரண்டு தங்கும் விடுதிகளும் நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்து இந்த விடுதியின் உரிமையாளர் பாலா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications