5 மாதம் தான்..பகுதி செயலாளர் பதவி! அமைச்சரை நெருங்கிய ‘கோடீஸ்வர கவுன்சிலர்’! கொந்தளிக்கும் உபிக்கள்!
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் சுயேட்சையாக போட்டியிட்டு திமுக கூட்டணி வேட்பாளரை தோற்கடித்த திண்டுக்கல்லின் 'கோடீஸ்வர கவுன்சிலர்' வெங்கடேஷ் என்பவர் 5 மாதங்களுக்கு முன்னர் தான் திமுகவில், சேர்ந்த நிலையில் தற்போது திமுக கிழக்கு பகுதி கழக செயலாளர் பதவி கேட்டு விண்ணப்பித்து அமைச்சரை நெருங்கி உள்ளதாகவும், இதனால் கட்சிக்கு பல ஆண்டுகள் உழைத்த உடன் பிறப்புகள் கடும் கொந்தளிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுங்கட்சியான திமுகவில் மாவட்டசெயலாளர்கள் மாநகர செயலாளர்கள் மற்றும் நகரம், ஒன்றிய செயலாளர்கள் அதுபோல் பேரூர். கிளைகழகம் உள்பட அனைத்து பொறுப்புகளுக்கும் உள்கட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் நடை பெற்று வருகிறது.
கடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் 35 வார்டுகளில் தனி பெரும்பான்மையாக திமுக கவுன்சிலர்கள் வெற்றி பெற்றதின் மூலம் திண்டுக்கல் மாநகராட்சியின் மேயராக இளமதியும், துணை மேயராக ராஜப்பாவும் இருந்து வருகிறார்கள்.

ஐ.பெரியசாமி
அந்தளவுக்கு கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவுக்கு சாதகமாக இருந்த திண்டுக்கல் மாநகரத்தை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மூலம் திமுக கோட்டையாக உருவாக்கியிருக்கிறார் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி. அதைத்தொடர்ந்து நடந்த கிளைக் கழக தேர்தலில் கட்சிக்காக உழைத்த உ.பி.களுக்கு பொறுப்புகளையும் வாரிக் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் தான் மாநகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் 12-வார்டுக்கு ஒரு பகுதி செயலாளர் உள்பட 10 பொறுப்பாளர்களை 11 பொறுப்பாளர்களுக்கான உள்கட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக கட்சி பொறுப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வேட்பு மனு கொடுத்ததுடன் மட்டுமல்லாமல் அமைச்சர் ஐ. பெரியசாமியிடமும் பரி ந்துரைக்க முட்டி மோதியும் வருகிறார்கள்.

கடும் போட்டி
இதில் வடக்கு பகுதிச் செயலாளர் பதவிக்கு முன்னாள் கவுன்சிலர் ஜானகிராமன். கிழக்குப் பகுதிச் செயலாளர் பதவிக்கு மாநகராட்சி கவுன்சிலர் வெங்கடேஷ், அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க தலைவர் ராஜேந்திரகுமார், மாவட்ட பிரதிநிதி சரவணன், மாநகர கவுன்சிலர் சித்திக் ஆகியோரும், மேற்கு பகுதிச் செயலாளர் பதவிக்கு முன்னாள் நகர் மன்றத் தலைவர் பசீர் அகமது மகனான பசுலுக்சக், மாநகர கவுன்சிலர் மார்த்தாண்டம், தெற்கு பகுதிச் செயலாளர் பதவிக்கு முன்னாள் கவுன்சிலர் சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் பகுதி செயலாளர் பதவிக்கு விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். இதில் கட்சிக்காக உழைத்து வருபவர்களுக்கும், மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கக் கூடியவர்களுக்கும் பகுதி செயலாளர்கள் பதவி கொடுக்க அமைச்சர் ஐ.பெரியசாமி தீவிர ஆலோசனையில் இருந்து வருகிறார்.

வெங்கடேஷ்
இதில் வெங்கடேஷ் கட்சிக்கு மிகவும் புதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கட்சியில் சேர்ந்து 5 மாதங்கள் கூட முழுமையாக ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 48 வார்டுகள் கொண்ட திண்டுக்கல் மாநகராட்சியில் யாரும் எதிர்பாராத வகையில் திண்டுக்கல்லில் மெகா கோடீஸ்வரரான லயன் ரத்தினத்தின் மகன் வெங்கடேஷ் என்பவரும் சுயேச்சையாக களத்தில் இறங்கி அரசியல் கட்சிகளுக்கு இணையாக வாக்கு சேகரித்தார். தண்ணீர் குழாய் சின்னத்தில் போட்டியிட்ட வெங்கடேஷ் கோடீஸ்வர குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் குப்பைகளை சுத்தம் செய்வது, சாக்கடை அள்ளுவது, வாக்காளர்களின் காலில் விழுவது என அரசியல் கட்சியினருக்கு டாஃப் கொடுத்து வாக்கு சேகரித்தார்.

கட்சியினர் தீவிரம்
அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் வேட்பாளர் குப்புசாமி என்பவர் போட்டியிட்டார். அதே தொகுதியில் அதிமுக உள்ளிட்ட பெரிய கட்சி வேட்பாளர்களும் சுயச்சை வேட்பாளர்களும் களத்தில் இறங்கிய நிலையில் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் வெங்கடேஷ் சுயேச்சையாக வெற்றி பெற்றார். பின்னர் பிப்ரவரி இறுதியில் திமுகவில் ஐ.பெரியசாமி முன்னிலையில் இணைந்தார் வெங்கடேஷ். இணைந்த வேகத்திலேயே துணை மேயர் பொறுப்பு கேட்ட நெருக்கடி கொடுத்த நிலையில், அதனை திண்டுக்கல் மாவட்ட முக்கிய அமைச்சருமான கண்டுகொள்ளவில்லை. கட்சிக்கு பல நாட்கள் உழைத்தவர்களுக்குத் தான் பதவி என அவர் உறுதியாகச் சொன்ன நிலையில், சென்னை வரை சென்றும் ஒன்றும் முடியாமல் போனது.

கொந்தளிப்பில் உ.பி.கள்
இந்நிலையில் தான் கட்சியில் சேர்ந்து ஆறே மாதங்களில் பகுதி செயலாளர் பதவியை தனக்கு வழங்க வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பை அணுகி இருக்கிறது வெங்கடேஷ் மற்றும் அவரது தந்தை லயன்.ரத்தினம் தரப்பு. கட்சிக்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்த பலர் அதே பகுதியில் வார்டு செயலாளராக கூட பதவி ஏற்க முடியாத நிலையில் கட்சியில் சேர்ந்த ஆறே மாதத்தில் பகுதி செயலாளர் பதவியை வெங்கடேஷ் கேட்டு இருப்பது திமுகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயத்தில் கடந்த முறை போல கட்சியில் உழைத்தவர்களுக்கு தான் பதவி என ஐ பெரியசாமி உறுதியாக இருப்பதாகவும் இதனால் தங்களுக்கே பதவி கிடைக்கும் என உறுதியாகச் சொல்கின்றனர் உடன்பிறப்புகள்.
-
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்! -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை! -
லோக்கல் பாலிடிக்ஸ்..கண் வைத்த கனிமொழி! க்ரீன் சிக்னல் கொடுக்காத ’உடன்பிறப்பு’..’சிலருக்கு’ சிக்கலாமே -
5 தொகுதிகள் ஒதுக்கும் திமுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு என்ன? 6 மணி நேரமாக நடந்த ஆலோசனை -
கொங்கில் கூட்டணிக்கு நோ சீட்.. ஸ்டாலினிடம் விடாப்படியா நின்ற தலைகள்! நேர்காணலில் நடந்த திடுக் விவாதம் -
மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட்












Click it and Unblock the Notifications