ஆட்சியர் சரவணனின் சதி.. பகீர் புகார் சொன்ன அமைச்சர் ஐ.பெரியசாமி! பதில் சொல்லாமல் மழுப்பிய கலெக்டர்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் முறைகேடு நடந்திருக்கிறது எனவும், இதற்கு திண்டுக்கல் ஆட்சியர் தான் சதி செய்திருப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக வந்துள்ள புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார் திண்டுக்கல் ஆட்சியர் சரவணன். ஆனால், அமைச்சரின் புகார் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்காமல் மழுப்பினார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக முழுவதும் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக பேசிய அவர்," திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் (SIR) போது, ஏறக்குறைய 7,227 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சுமார் 26 வாக்குச்சாவடிகளில் இந்த முறைகேடு நடைபெற்றிருக்கிறது. இதன் பின்னணியில் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வரை சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.
சின்னாளப்பட்டி பேரூராட்சியில் உள்ள மொத்த வாக்காளர்களில் சுமார் 7,227 வாக்காளர்களின் பெயர்களில் 'இடம்பெயர்ந்துவிட்டார்கள்' (Shifted) எனக் குறிப்பிடப்பட்டு, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. சிறப்புச் சேர்க்கைப் பணி டிசம்பர் இரண்டாம் வாரம் வரை தொடர வேண்டிய நிலையில் இரவோடு இரவாக இப்பணியை வட்டாட்சியர் முடித்துள்ளார். 2016ஆம் ஆண்டுத் தேர்தலில் சின்னாளப்பட்டியில் 17,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் தற்போது நடைபெற்ற சிறப்புச் சேர்க்கையில் 16,800 வாக்குகளே சேர்க்கப்பட்டுள்ளது.
சின்னாளப்பட்டி பகுதியில் பலர் வணிக காரணங்களுக்காக வெளியூர்களுக்குச் சென்று திரும்புபவர்கள் என்பதால் சேர்க்கைக்கான கடைசி நாள் வரை பொறுமையாக இருந்து வாக்காளர் சேர்க்கை பணிகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சேர்க்கைப் பணிகள் அவசரமாக நிறுத்தப்பட்டதால், இன்று வந்த பலரும் வாக்காளராகச் சேர முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெரிய சதி நடந்துள்ளதற்கு, மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்." என கூறியிருந்தார்.
இந்நிலையில், எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக வந்துள்ள புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார் திண்டுக்கல் ஆட்சியர் சரவணன். ஆனால், அமைச்சரின் புகார் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்காமல் மழுப்பினார். திண்டுக்கல்லில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்த நிலையில், ஆத்தூர் தொகுதியில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெறவில்லை என அமைச்சர் குற்றம் சாட்டியது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஞாயிற்றுக்கிழமை சில இடங்களில் முடித்து விட்டோம் என அதிகாரிகள் கூறினர். இன்று காலை அனைவரையும் வாங்க சொல்லி உள்ளோம் என்றார்.
ஆத்தூர் தாசில்தார் பிஎல்ஓ களிடம் இருந்து வாக்காளர்கள் ஷிப்டிங் என படிவத்தை பூர்த்தி செய்து வாங்கியதாக அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியது குறித்த கேள்விக்கு, அப்படி சொல்லவில்லை பணிகளை வேகமாக முடிக்க சொல்லி சொல்லி இருப்பார் அதனை மீண்டும் மறுஆய்வு செய்ய சொல்லி உள்ளோம். அரசியல் வேண்டாம் என மழுப்பலாக பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications