தித்தித்த திண்டுக்கல்.. வத்தலகுண்டு தாய்மாமன் நட்டுவைத்த வழுக்கு மரத்தில் ஏறி முயன்ற மருமகன்.. வாவ்
திண்டுக்கல்: மாமன், மருமகன் உறவுகளை கொண்டாடும் விதமாக, திண்டுக்கல்லில் நடத்தப்பட்ட பொங்கல் விளையாட்டு போட்டிகள் பலரது கவனத்தையும பெற்று வருகிறது. அந்த வகையில் விராலிப்பட்டியில் நடந்த விளையாட்டு என்ன தெரியுமா?
அன்றுமுதல் இன்றுவரை தாய்மாமன்களுக்கான முக்கியத்துவம் குறையாமலேயே உள்ளது.. வீட்டு பெண்களுக்கு எந்த விசேஷம் என்றாலும், தாய்மாமன்களின் பங்குதான் அதில் பிரதானமாக பார்க்கப்படும்.

தாய்மாமன்கள்: ஒரு பெண்ணின் வளர்ச்சியில், தாய்க்கு பிறகு தந்தைக்கு கூட இல்லாத உரிமையும், அங்கீகாரமும் அந்த தாய்மாமன்களுக்கு உண்டு என்று நம்முடைய முன்னோர்கள் கருதினார்கள். தாய்மாமன்களும் தங்களுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து வீட்டு பெண்களை பத்திரமாக பாதுகாத்து வருகிறார்கள்.
எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், தங்களது அக்கா, தங்கையின் குழந்தைகள் என்றால், அனைத்தையும் தூரவைத்துவிட்டு, முதல் நபராக ஓடோடி வந்து நிற்கிறார்கள் தாய்மாமன்கள், அப்பெண்ணுக்கு, காது குத்துதல், மொட்டை அடித்தல், மஞ்சள் நீராட்டுவிழா, திருமணம், வளைகாப்பு வரை தாய்மாமன்கள் செய்யும் சீர்வரிசையை, அந்த ஊரே மூக்கின்மீது விரல் வைத்து பார்க்கும்.. எவ்வளவுதான் நவீனம் வளர்ந்தாலும், இந்த மாண்பு மட்டும் தமிழகத்தில் இன்னும் குறையாமல் உள்ளது.
தென்மாவட்டம்: நகர்ப்புறங்களில் ஓரளவு குறைந்துவிட்டபோதும், கிராமப்புறங்களில், அதுவும் தென்மாவட்டங்களில், தாய்மாமன்களுக்கான மரியாதையும், முக்கியத்துவமும் வலுவாகவே உள்ளது.. வீட்டு விசேஷங்களை தாண்டி, தாய்மாமன்களை வைத்து பொங்கல் விழாவும் நடத்தப்பட்டுள்ள சம்பவம் வியப்பை கூட்டி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ளது ப.விராலிப்பட்டி.. இந்த கிராமத்தில் பொங்கல் விழா பண்டிகையையொட்டி தாய்மாமன் உறவு முறை கொண்டவர்கள் வழுக்கு மரத்தினை நட்டு வைப்பார்களாம்.. பிறகு தங்களுடைய மருமகன், மாப்பிள்ளை உறவுமுறை கொண்டவர்களை, வழுக்கு மரம் ஏறுவதற்கு அழைப்பு விடுத்தனர். இப்படி அழைப்பு விடுக்கும்போது, கேலியும், கிண்டலும் செய்வார்களாம் தாய்மாமன்கள்.
மாலை, மரியாதை: கேலி செய்ததுமே, பொத்துக்கொண்ட ரோஷத்துடன், களத்துக்கு வரும் மருமகன்களுக்கு, மாலை அணிவித்து வரவேற்பார்கள்.. பிறகு வழுக்கு மரம் ஏறவும், அதற்கான பரிசுகளை சொல்லியும் உற்சாகப்படுத்துவார்கள்.. இறுதியில், மருமகன், மாப்பிள்ளை உறவுகள் அனைவரும், சேர்ந்து வழுக்கு மரத்தில் ஏற முயற்சிப்பார்கள்.. ஆனால் மாமன்கள் ஒன்றுசேர்ந்து, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி மரம் ஏற விடாமல் தடுத்து கொண்டேயிருப்பார்கள்.
அந்தவகையில், இப்போதும் பொங்கல் விளையாட்டு போட்டி இக்கிராமத்தில் நடந்துள்ளது.. மேற்கு வீட்டு பங்காளிகள் என்ற மாமன் முறை கொண்டவர்கள், ஊர் மைதானத்தில் 11,000 ஆயிரத்தை பரிசு பணத்தை கட்டி வழுக்கு மரத்தை நட்டு வைத்து, தங்கள் மருமகன்களையும் வழுக்குமரம் ஏற அழைப்பு விடுத்தனர்.
மருமகன்-மாமன்: அதன்படியே மருமகன்கள் வழுக்கு மரம் ஏறி முயன்றபோது, மாமனார்கள் தண்ணீரை ஊற்றி, அவர்களை தடுத்து கீழே இழுத்தனர்.. எவ்வளவோ முயன்றும்கூட, யாராலுமே வழுக்கு மரத்தில் ஏற முடியவில்லை.. அந்த அளவுக்கு தாய்மாமன்கள் டஃப் தந்து கொண்டிருந்தார்கள்..
போட்டி நேரத்திற்குள் மருமகன்களால் பரிசு தொகையை எடுக்க முடியவில்லை. இறுதியில் தாய்மாமன்களே அதாவது மாமனார்களே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டிதான் இணையத்தில் அனைவரையும் ஈர்த்து வருகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications