திண்டுக்கல்லில் போலீசார் முன்னிலையில் இளைஞர் தற்கொலை முயற்சி! பொய் வழக்கு போட முயல்வதாக புகார்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சிறையிலிருந்து வெளியே வந்த இளைஞரை, விசாரணைக்கு தனிப்படை போலீசார் வீடு தேடிச் சென்று அழைத்த நிலையில், பொய் வழக்கு போட முயல்வதாக கூறி இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த இருளப்பன் மகன் விக்னு என்ற விக்னேஷ்(28). இவர் மீது கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த விக்னு என்ற விக்னேஷ் YMR-பட்டியில் தனது தாய் வீட்டில் இருந்த போது தனிப்படை போலீசார் 3 பேர் விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். விசாரணைக்கு போக மறுத்த விக்னேஷ், தன்மீது பொய் வழக்கு போடுவதற்காக அழைக்கிறீர்கள் என்று கூறி வீட்டின் வாசலில் தனிப்படையினர் முன்னிலையிலே கத்தியால் கை மற்றும் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர், விக்னேஷை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications