பீன்ஸ், தக்காளி விலைதான் இப்படின்னா! வாங்க ஆள் இல்லாமல் உதைப்படும் முருங்கைக்காய்க்கு என்ன ஆச்சு?
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ 100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் அண்மைக்காலமாக வெயிலின் தாக்கம் இருந்தது. எனினும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை அதிகரித்தது. இதனால் கிலோ 24 க்கு விற்கப்பட்ட தக்காளியின் விலை ரூ 80 வரை விற்பனையானது.

திருவல்லிக்கேணி ஜாம்பஜார், அரும்பாக்கம், திநகர் உள்ளிட்ட சில்லறை விற்பனை சந்தைகளில் கிலோ ரூ 80-க்கும் வியாசர்பாடி, கொடுங்கையூர் போன்ற விளிம்பு நிலை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் 3ஆம் தர சிறிய தக்காளி ரூ 60 க்கும் விற்கப்பட்டு வருகிறது.
தக்காளியின் விலை மட்டுமல்லாமல் மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. முருங்கைக்காய் கடந்த வாரம் கிலோ ரூ 20க்கு விற்பனையான நிலையில் ரூ 70 -க்கு விற்பனையானது. அது போல் அவரையின் விலை ரூ 80 ஆகவும் பீன்ஸின் விலை ரூ 150 ஆகவும் விற்பனையானது.
இந்த பச்சை மிளகாய் கெட்ட கேடு ரூ 50 க்கு விற்பனை செய்யப்பட்டது. "இந்த மாதம் இறுதி வரை காய்கறிகளின் விலை உயர்வாகத்தான் இருக்கும். அறுவடை பருவம் நிறைவடையும் நிலையில் உள்ளது. அதனால் காய்கறிகளின் வரத்து குறைந்து அவற்றின் விலையும் உயர்ந்துள்ளன.
அதுபோல் கோடையில் மழை காரணமாக பல்வேறு மரங்களில் பிஞ்சுகள், பூக்கள், காய்கள் எல்லாம் உதிர்ந்துவிட்டன. இந்த நிலையில் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ 40 ஆக இருந்த முருங்கைக்காய் நாளுக்கு நாள் விலை அதிகரித்து ரூ 100 க்கு விற்பனையாகிறது.
ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, கப்பலப்பட்டி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, சாலைப்புதூர், கொல்லப்பட்டி, இடையகோட்டை, மார்க்கம்பட்டி சுற்று பகுதிகளில் முருங்கைக்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இடையகோட்டை, மார்க்கம்பட்டி, மூலச்சத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் முருங்கைக்காய் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது.
ஆனால் கோடை மழையால் முருங்கைச் செடியில் இருந்த பூக்கள், பிஞ்சுகள், காய்கள் உதிர்ந்துவிட்டன. வரத்து முற்றிலும் குறைந்த நிலையில் தூத்துக்குடியில் விளைந்த முருங்கைக்காய் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர். தூத்துக்குடியிலும் மழையால் முருங்கைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்ட நிலையில் தேவை அதிகரித்ததால் விலை உயர்ந்துள்ளது.
கடந்த 5 ஆம் தேதி ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ 40-க்கு விற்ற நிலையில் நேற்று ஒரு கிலோ ரூ 100 க்கு விற்பனையானது. பீன்ஸ், அவரை உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகமாக இருந்தாலும் முருங்கைக்காய் , கத்திரிக்காயை வைத்து ஓட்டலாம் என்றால் அதுவும் இந்த விலைக்கு விற்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications