கோயில் பூசாரி தற்கொலை வழக்கில் ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா விடுதலை! திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு
திண்டுக்கல்: தேனி மாவட்டத்தில் கோயில் பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸின் தம்பி ஓ.ராஜா உள்பட 6 பேரை விடுதலை செய்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த சுப்புராஜ் மகன் நாகமுத்து (22). இவர் கைலாசப்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலின் பூசாரியாக இருந்து வந்தார்.

கோயிலில் கடை ஒதுக்குவது தொடர்பாக இவருக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ. ராஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி நாகமுத்து தற்கொலை செய்துக் கொண்டார். இவர் தற்கொலை செய்துக் கொள்ள கோயில் அறங்காவலரும் பெரியகுளம் முன்னாள் நகர்மன்றத் தலைவராகவும் இருந்த ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி உள்பட 7 பேர் மீது பெரியகுளம் தென்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
சென்னை மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவின்படி 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த வழக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்ற போதே பாண்டி இறந்துவிட்டார். இந்த நிலையில் மற்ற 6 பேர் மீதான விசாரணை திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஓ.ராஜா, மணிமாறன், சிவக்குமார், ஞானம், லோகு, சரவணன் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர். எனினும் இந்த வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த மரண வழக்கில் 23 சாட்சியங்கள் இதுவரை விசாரிக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட 6 பேருக்கு எதிரான ஆதாரங்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. அரசுத் தரப்பின் இறுதிக் கட்ட வாதத்துக்காக ஒத்தி வைக்கப்பட்டு இருந்த இந்த வழக்கு விசாரணையின் போது மூன்று பேர் மட்டும் நீதிபதி முரளிதரன் மூவர் ஆஜராகினர். அப்போது ஓ. ராஜா உள்பட மற்ற 3 பேர் ஆஜராகாத நிலையில் இறுதிக் கட்ட விசாரணை முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா உள்பட 6 பேரையும் விடுதலைச் செய்வதாக திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications