பிரசாரத்திற்கு வராத தலைவர்கள்..திமுகவுக்கு தாவிய ”மாம்பழ” புள்ளி..! பதற்றத்தில் பாமக வேட்பாளர்..!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: பாஜக கூட்டணியில் இடம்பெற்ற பாமக சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திலகபாமாவுக்கு ஆதரவாக இதுவரை பாஜகவின் முக்கிய தலைவர்கள் மட்டுமல்லாது பாமகவின் முன்னணித் தலைவர்களே பிரசாரத்திற்கு வராதது தொண்டர்களை சோர்வடைய செய்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதியானது அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி தமிழகத்தில் நிலவுகிறது.

Executives who did not collect votes for Dindigul Lok Sabha constituency pmk candidate ThilagaBama

திமுகவை பொருத்தவரை முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பொறுப்பு அமைச்சர்களும் நட்சத்திர பேச்சாளர்களும் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தங்கள் கட்சியினருக்கும் தங்கள் கூட்டணி கட்சி இருக்கும் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்

தீவிர பிரசாரம்: இதே போல அதிமுக கூட்டணிகள் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டி வருகின்றனர். பாஜகவை பொறுத்தவரை அண்ணாமலை, எல்.முருகன் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட உள்ளூர் தலைவர்களும், பிரதமர் மோடி அமித்ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்களும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

தருமபுரியில் பாமக முகாம்: அதே நேரத்தில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தலைவர்கள் தர்மபுரி தொகுதியிலேயே முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அங்குதான் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்-ன் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். இதன் காரணமாக அன்புமணி ராமதாஸ் அவரது மகள்கள் மனைவி என அனைவருமே தர்மபுரி தொகுதியிலேயே முகாமிட்டு ஆதரவு திரட்டி வருவதால் பிற பகுதிகளில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது

திண்டுக்கல்லில் சுணக்கம்: குறிப்பாக திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளர் திலகபாமாவுக்கு ஆதரவாக இதுவரை அந்தக் கட்சியின் முன்னணித் தலைவர்கள் யாரும் பிரச்சாரத்திற்கு வரவில்லை. மேலும் கூட்டணி கட்சித் தலைவர்களும் இதுவரை பிரசாரத்திற்கு கை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதே நேரத்தில் தன்னந்தனியாகவும் மாவட்ட பாஜக தலைவர்களுடனும் திலகபாமா பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். வடை சுடுவது தாரை தப்பட்டை அடித்து வாக்கு சேகரிப்பது பூ பறிப்பது என வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் களத்தில் அவரது செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது.

வெற்றிக்கு கைகொடுக்குமா?: ஆனால் அது தேர்தல் வெற்றிக்கு கை கொடுக்குமா என்பது முக்கிய கேள்வியாக இருப்பதாக கூறுகின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர். மேலும் திலகபாமாவுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியினர் சிலரே செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் மாவட்ட தலைவர்கள் செயலாளர்களை தவிர்த்து வேறு ஒரு குழு திலகபாமாவின் பெயரைச் சொல்லாமல் கட்சி உத்தரவிட்டிருக்கிறதே என்பதற்காக அவரது பெயர் மற்றும் படம் இல்லாமல் வெறும் நோட்டீஸ்களை மட்டும் கொடுத்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

Executives who did not collect votes for Dindigul Lok Sabha constituency pmk candidate ThilagaBama

நிர்வாகிகள் புறக்கணிப்பு: தனது பிரச்சார வாகனத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை கூட ஏற அனுமதிக்காத திலகபாமா பாஜக தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக குற்றம் சாட்டினர் பாமக நிர்வாகிகள். சில நேரங்களில் நீண்ட நேரம் மாவட்ட தலைவர் ஒருவரே நடந்து சென்று வாக்கு சேகரித்ததாகவும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் திண்டுக்கல் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள். இது தவிர தற்போது அவருக்கு மேலும் ஒரு சிக்கலும் முளைத்திருக்கிறது.

சிக்கலில் வேட்பாளர்: கடந்த சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய அமைச்சரான ஐ.பெரியசாமியை எதிர்த்து போட்டியிட்ட திலகபாமா படுதோல்வியை சந்தித்தார். அதேபோல் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாமக பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த போது போட்டியிட்டு தோல்வியடைந்த ஜோதி முத்து திலகபாமா இடையேயான மோதலில் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதை அடுத்து அதிருப்தியில் இருந்த அவர் தேனி பிரச்சாரத்திற்கு வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மேலும் கட்சியின் சில முக்கிய நிர்வாகிகளையும் அவர் திமுகவில் இணைய வைத்தது திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பாஜக பிரமுகர் ஒருவரும் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது தற்போதைய வேட்பாளரான திலகபாமாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர் களத்தில் நிற்கும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+