நாங்க சொல்றபடி கேளுங்க! அரசு ஹாஸ்டலுக்குள் அத்துமீறிய 5 பேர்! கொட்டித் தீர்த்த மாணவிகள்! பரபர பழனி!
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசு பெண்கள் விடுதியில் தங்கியுள்ள பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, விடுதியில் கண்காணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பழனி சத்யா நகர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவிகள் விடுதியில் பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் விடுதி மாணவிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விடுதி மாணவிகள்
அப்போது மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு துறையில் உள்ள அதிகாரிகள் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தங்களை தொடர்பு கொள்ளலாம் என்று தொடர்பு எண்களை தெரிவித்தனர். இந்நிலையில் அதிகாரிகள் கொடுத்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட மாணவிகள் சிலர் கொடுத்த புகாரில் விடுதியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் அளித்தனர்.

அதிகாரிகள் விசாரணை
இந்த தகவல் மற்றும் புகாரின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நல துறை அதிகாரிகள் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது விடுதியில் தங்கியுள்ள பள்ளி மாணவிகள் சிலர் இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக மாணவிகள் சிலர் மாவட்ட குழந்தைகள் காப்பகம் அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டு அவர்களது வாக்குமூலம் பெறப்பட்டது.

5 பேர் கைது
அதில் கிடைத்த தகவல் படி, பழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பழனி சத்யா நகரை சேர்ந்த கிருபாகரன், ராகுல், பரந்தாமன் மற்றும் 18வயதான கல்லூரி மாணவன் ஒருவர் உட்பட 5 பேரை பழனி அனைத்து மகளீர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணியிடை நீக்கம்
விவகாரத்தில் ஆதிதிராவிடர் விடுதியில் அலட்சியமாக பணிபுரிந்ததாக கூறி விடுதி காப்பாளர் அமுதா விடுதி காவலாளி விஜயா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டுமென மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
பணம் கேட்டு மிரட்டுகிறார் ராம.ரவிக்குமார்.. எஸ்பி அலுவலகத்தில் மாஜி அறங்காவலர் பரபர புகார்! பின்னணி? -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
பழனி கோவில் பஞ்சாமிர்தம் விலையை உயர்த்த முடிவு? விஷ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications