திண்டுக்கல் சிறுமலையில் சிவன் கோயில் அருகே நள்ளிரவில் தீப்பிடித்து எரியும் காடுகள்.. பக்தர்கள் கவலை
திண்டுக்கல்: திண்டுக்கல் சிறுமலையில் நள்ளிரவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான மரங்கள், செடிகள் கொழுந்து விட்டு எரிந்தன. இவற்றை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். சிறுமலை சிவன்கோயில் அருகே ஏற்பட்ட தீ விபத்தை கண்ட பக்தர்கள் தகவல் தெரிவித்ததையடுத்து அதனை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கொடைக்கானல் மற்றும் அதன் அருகே உள்ள மலை பகுதிகளில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் காட்டுத்தீ ஏற்படுவது இயல்பாகவே நடக்கிறது.
திண்டுக்கல் மாநகரில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்திலும், மதுரையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும் சிறுமலை அமைந்துள்ளது. சிறுமலை என்பது பெயருக்கு தகுந்தாற்போல் சிறிய மலை தான்..ஆனால் அடர்ந்த வனப்பகுதியாகும். கொடைக்கானல் போல் இருக்காது என்றாலும், இங்கு நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் கால நிலை சுற்றுலாவிற்கு ஏற்றதாக இருக்கும்.

பிப்ரவரி பிற்பாதி வரையிலும் இங்கு கிளைமேட் நன்றாக இருக்கும். ஆனால் அதற்கு மேல் வெயில் ஆரம்பித்துவிடும். என்னதான் வெயில் அடித்தாலும் மரங்கள் அதிகமாக இருக்கும் பகுதி என்பதால் வெயிலே சிறுமலையில் தெரியாது.. பல விதமான செடிகளும், மரங்களும் உள்ளன. ஏராளமான வன விலங்குகளும் வாழ்கின்றன. சிறுமலையில் விளையும் மலை வாழைப் பழங்கள் மிகவும் இனிப்பாக இருக்கும். சிறுமலை வாழைக்கு வெளியூர்களில் நல்ல மவுசு உண்டு.
சிறுமலை மற்றும் பக்கத்தில் உள்ள கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் பொதுவாக பிப்ரவரி பிற்பாதிக்கு பிறகு வறட்சி அதிகமாக இருக்கும். தற்போது வெயில் அதிகமாக உள்ளது.இதனால் ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் காட்டுத்தீ பரவி, வனப்பகுதி கருகுவது வாடிக்கையாக உள்ளது.
கொடைக்கானல் - பழநி ரோடு மேல்பள்ளம் வனப்பகுதியில் கடந்த 10 நாட்கள் முன்பு திடீரென காட்டுத்தீ பற்றி, மளமளவென பரவியதால், ஏராளமான வனப்பகுதிகள் தீக்கிரையாகின. அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வனத்துறையினர், தீயணைப்புதுறையினர் தீயை கட்டுப்படுத்தினார்கள். இதேபோல் சில நாட்கள் முன்பு கொடைக்கானல் கார்மேல்புரம் குடியிருப்பு பகுதிக்கு அருகேயுள்ள நிலப்பரப்பில் காட்டுத்தீ பிடித்தது. சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
சிறுமலையில் உள்ள சிவன் கோவில் பகுதியில் இன்று அதிகாலை காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்தது. சிவராத்திரி கொண்டாட சென்ற பக்தர்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர் அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ள நிலையில், வனப்பகுதிகளை காட்டுத் தீயிலிருந்து பாதுகாக்க வனத்துறை தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications