’SIR’ வரட்டும், எடப்பாடி சார் தான் முதல்வர்! பீகாரில் இப்படித்தான் ஜெயித்தோம்: திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல்: பீகாரில் பாஜக -நிதிஷ்குமார் வெற்றிக்கு காரணம் எஸ்ஐஆர் தான் காரணம் எனவும், பீகார் தேர்தல் வெற்றியைப் போல் 2026 தமிழக தேர்தலிலும் 220 தொகுதிகளுக்கு மேல் அதிமுக வெற்றி பெற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 89 ஆவது குருபூஜை தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் திருச்சி சாலையில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு திண்டுக்கல் அதிமுக எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின் அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது," பீகார் தேர்தலைப் போல் முழுக்க முழுக்க தமிழகத்தில் வெற்றியாக வரும். 220 இடங்களுக்கு மேல் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி 2026ல், பீகார் நிதீஷ் குமார் போன்று முதலமைச்சராக வருவார்.

SIR எதிர்க்க ஒன்றுமில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றது. எதற்காக ராகுல் அவர்கள் SIR எதிர்க்கிறார் என்று தெரியவில்லை. ஸ்டாலினும் இதை எதிர்த்து வருகிறார். வாக்காளர் சேர்க்கும் இடத்தில் திமுக கொடி தான் பறக்கிறது அவர்கள்தான் அனைத்து இடங்களிலும் இருக்கிறார்கள். SIR -யை வீடு வீடாக சேர்க்க வேண்டும். நமது சுதந்திரம் நமது உரிமை. இதனால் எந்த பாதிப்பும் இல்லை. ஏன் திமுக மற்றும் ஸ்டாலின் இதை தடுக்கிறார்கள் தெரியவில்லை.
புலி வாலை பிடித்து விட முடியாமல் தவிக்கிறார்கள். உண்மை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். 234 தொகுதிக்கும் என ஆயிரக்கணக்கான வாக்கு சாவடிகள் உள்ளது. அதற்கான ஆட்களை நியமனம் செய்து சம்பளம் கொடுத்தால்தான் வேலை செய்வார்கள். இருக்கும் ஊதியத்தை வைத்து அரசு ஊழியர்களை வேலை வாங்கினால் எவ்வாறு செய்வார்கள். அரசு ஊழியர்கள் செய்வது நூற்றுக்கு நூறு சரி.
SIR - யால் ஒரு கோடி வாக்குகள் குறையும் என சீமான் கூறியுள்ளார். சீமான் சொல்வது குறைவான வாக்குகள் அதிகமான வாக்குகள் குறையும். திண்டுக்கல் தொகுதியில் 40 ஆயிரம் முதல் 50,000 வாக்குகள் பாதிக்கும். பீகார் வெற்றிக்கு காரணம் எஸ்ஐஆர் தான். SIR எதிர்ப்பு போராட்டம் குறித்து விஜய் இடம் தான் கேட்க வேண்டும்.
திமுகவை வசை பாடுவதற்காகவே SIR எதிர்ப்பு போராட்டத்தை விஜய் நடத்தியுள்ளார் என திருமாவளவன் கருத்து தெரிவித்தது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்." என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications