ஒட்டன்சத்திரம் தளையூத்து அருவிக்கு வந்த 11 நண்பர்கள்! நீரில் மூழ்கி 4 பேர் பலியான சோகம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அருவியில் குளித்த போது 4 இளைஞர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீரில் மூழ்கிய 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவரது உடல் தேடப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே மேல் தளையூத்து அருவியில் மூழ்கி 4 இளைஞர்கள் பலியான சம்பவத்தில், அவர்கள் உற்சாகமாக அருவிக்கு சென்ற கடைசி வீடியோ வெளியாகிப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த 11 நண்பர்கள் நேற்று மாலை ஒட்டன்சத்திரம் வனப்பகுதிக்குள் அனுமதியின்றிச் சென்றதாக தெரிகிறது. இவர்கள் அங்கிருந்த அருவி ஒன்றில் குளித்தனர். அப்போது, ஆதில், சதாம் உசேன், ஆயாஸ் மற்றும் பாரூக் ஆகிய 4 இளைஞர்கள் அருவியில் மூழ்கினர்.
இதனால் பதறிய மற்ற நண்பர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த போலீஸாரும் தீயணைப்பு வீரர்களும் நீரில் மூழ்கியவர்களை தேடினர்.

நேற்று இரவு நேரம் ஆகிவிட்டதாலும், அடர்ந்த வனப்பகுதி என்பதாலும் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று காலை தீயணைப்புத் துறையினர், வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஒன்றிணைந்து தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தினர்.
இதில் முதற்கட்டமாக மூன்று இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மாயமான மேலும் ஒருவரை தேடும் பணி தற்போதும் தொடர்ந்து வருகிறது.
இதனிடையே, உயிரிழந்த இளைஞர்கள் அருவிக்குச் செல்வதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு தங்களது செல்போனில் எடுத்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நண்பர்கள் அனைவரும் சிரித்துப் பேசிக்கொண்டே, அதுதான் தங்களின் கடைசிப் பயணம் எனத் தெரியாமல் உற்சாகமாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

இதை கண்ட இறந்தவர்களின் நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனுமதியில்லாமல் காட்டு பகுதி, நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கை விடுத்தாலும் ஜாலிக்காக இது போல் சென்று உயிரை மாய்த்து கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது போல் ஆபத்தான இடங்களுக்கு அந்த இடத்தை பற்றி தெரிந்த, அரசால் அனுமதிக்கப்பட்ட ஒரு நபரை அழைத்து செல்ல வேண்டும் என்பதுதான் பலரது அறிவுரையாக இருக்கிறது.
-
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications