’மொட்டை’ தான் மிஞ்சும் போல! பழனி பக்தர்கள் பாக்கெட்டை பதம் பார்க்கும் ‘போலி கைடுகள்’! உஷார் மக்களே!
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் கோவில் ஊழியர்களின் உதவியோடு போலி கைடுகள் ரோப் கார், விஞ்ச், சுவாமி தரிசனத்திற்கு என தனிதனியாக 'பேக்கேஜ்' பேசி பணம் பறித்து பக்தர்களின் பாக்கெட்டை காலி செய்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீரான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களிலிருந்தும் ,வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.
இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

பழனி முருகன் கோவில்
பொதுவாக வெள்ளி, சனி ,ஞாயிறு தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் மின் இழுவை ரயில் ,ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனை பயன்படுத்தி போலி கைடுகள் நாங்கள் விரைவாக மலைக் கோவிலுக்கு அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்து வைத்து மீண்டும் வரிசையில் நிற்காமல் அழைத்து வருகிறோம் என்று கூறி பேரம் பேசுகின்றனர். இதில் பேக்கேஜ் கட்டணமாக பேரம் பேசப்படுகிறது.

போலி கைடுகள்
அதுவும் மின் இழுவை ரயிலிலோ, ரோப் கார் நிலையத்திலையோ அனுப்பி வைக்கப்பட மாட்டாது பேக்கேஜ் கட்டணமாக பேரம் பேசப்பட்டு, கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உடன் போலி கைடு அல்லது கோவில் அதிகாரிகள் யாராவது உடன் பக்தர்களை அழைத்து செல்கிறார்கள். கட்டணம் வரிசையில் நின்று சென்றால் மின் இழுவை ரயிலில் 10 ரூபாய், 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது ,ரோப்கார்க நிலையத்தில் 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் போலி கைடுகள் மின் இழுவை ரயில் ,ரோப் கார் நிலையத்தில் வரிசையில் நிற்காமல் அழைத்து செல்வதாக கூறி ஒரு நபருக்கு 100 ரூபாய் என்றும் தரிசனத்திற்கு தொலைவில் நின்று பார்க்க ஒரு நபருக்கு 500 என்றும், சாமி அருகில் நின்று பார்க்க ஒரு நபருக்கு 700 ரூபாய் என்றும் ,தங்கப் படி முன்பு அமர்ந்து பார்க்க ஒரு நபருக்கு 1000 ருபாய் என பேரம் பேசப்பட்டு அழைத்து செல்கின்றனர்

பேக்கேஜ் வசூல்
சாதாரண நாட்களில் 100 ருபாய் ,விசேச நாட்களில் 200 ருபாய் மட்டுமே கோவில் நிர்வாகம் கட்டணமாக உள்ளது. ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் ஐந்து பேர் வந்தால் 5000 முதல் வெளிநாட்டு பக்தர்கள் என்றால் இந்தத் தொகை இரட்டிப்பாகவும் பேரம் பேசப்பட்டு போலி கைடுகள் பணம் பார்க்கின்றனர். சில பக்தர்கள் இதை எதிர்பார்க்காமல் உடன் சென்று ஏமாறுகின்றனர். சிலர் ஊருக்கு திரும்பவே பணம் இல்லாமலும் தவிக்கின்றனர்.

ஊழியர்களுக்கு லஞ்சம்
பக்தர்களை மின் இழுவை ரயில்,ரோப் கார் மூலமாக அழைத்து சென்ற போலி கைடுகள் ...அங்கிருக்கும் பக்தர்கள் தரிசனம்செய்து விட்டு வெளியே வரும் வழியில் எதிரே நின்று கொண்டு கோவில் ஊழியர் மூலமாக தாங்கள் அழைத்து வந்த பக்தர்களை அவர்களுடன் அனுப்பி வைப்பர் ,பின்னர் அவர்கள் எந்த வகையில் சாமி தரிசனம் செய்து வைத்தார்கள்,சந்தோசமாக சாமி தரிசனம் செய்தார்கள் என்ன பேசி கொண்டார்கள் ,என்ன முணுமுணத்தார்கள் என கோவில் ஊழியர்கள் மூலமாக தெரிந்து கொண்டு அதற்கேற்ப ஊழியர்களுக்கு லஞ்சம் வழங்கப்படுகிறது.

பக்தர்கள் அவதி
பழனி கோவிலுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது இணை ஆணையராக நடராஜன் என்பவர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இவர் போலி கைடுகளுக்கு உதவும் கோவில் சூப்பிரண்டுகளை களையெடுத்து வெளி மாவட்டங்களில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களுக்கு மாற்றினர். அதேபோல வெளி கோவிலில் இருக்கும் ஊழியர்களைக் அழைத்து வந்து நியமனம் செய்தார். ஆனால் பழனி கோவிலில் போலி கைடுகள் அட்டூழியம் கோவில் ஊழியர்களே உடந்தையாக இருப்பதாலும் அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் போலி கைடுகளுக்கு சாதகமாகவும் உள்ளதால் நாளுக்கு நாள் போலி கைடுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

நடவடிக்கை தேவை
இதனை தடுக்க முடியாமல் நிர்வாகத்தினர் குழப்பத்தில் உள்ளனர். தற்போது அறங்காவலர் குழுவினர் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் உள்ளூரை சேர்ந்தவர் அறங்காவலர் குழுவில் இல்லை என்பது உள்ளூர் மக்களின் குற்றச்சாட்டாக இருக்கும் நிலையில் நியமிக்கபட்டவர்களாவது இந்த போலி கேடுகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பார்களா ? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் பழனி முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள்!












Click it and Unblock the Notifications