Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேரா.. லுங்கியோட வந்துட்டாரு.. போலீஸ் கண்முன்னாலயே.. நெஞ்சை பிடித்தபடி உயிர் போயிடுச்சே.. ஐயோ பதறுதே

பெண் இன்ஸ்பெக்டர் கண்முன்னேயே விஷம் குடித்து உயிரிழந்துள்ளார் திண்டுக்கல் விவசாயி

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே.. அதுவும் பெண் இன்ஸ்பெக்டர் கண்முன்னாலேயே விஷம் குடித்து இறந்துள்ளார் ஒரு விவசாயி.. இந்த வீடியோ தற்போது வெளியாகி, இணையத்தில் கடுமையான அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது அம்மையநாயக்கனூர்.. இங்குள்ள பகுதி குள்ளலகுண்டை.. பாண்டி என்ற விவசாயி இங்கே வசித்து வருகிறார். இவருக்கு கொடைரோடு சிறுமலை அடிவாரம் பகுதியில் நிலம் உள்ளது.

இந்த நிலத்தை அதே பகுதியில் உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்த சிலர் அபகரிக்க முயற்சி செய்திருப்பதாக தெரிகிறது.. அதனால், இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டி புகார் தந்துள்ளார்.

அபகரிப்பு

அபகரிப்பு

அதாவது, பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த சங்கர் , நாச்சியப்பன், சின்ன கருப்பு உட்பட மூன்று பேரும் சேர்ந்து தனது நிலத்தை அபகரிக்க நினைக்கிறார்கள் என்றும், அடியாட்களை கொண்டு தன்னையும் தனது மகனையும் தனது குடும்பத்தாரையும் தாக்கி வருவதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார். ஆனால், அந்த புகார்மீது, இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.. இதனால் அதிருப்தி அடைந்த பாண்டி, கோர்ட் உதவியை நாடினார்.. நிலக்கோட்டை கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்வதற்கான உத்தரவையும் வாங்கி தந்தார்..

வாசற்படியில்

வாசற்படியில்

அப்படியிருந்தும் சண்முகலட்சுமி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அந்த புகார் சம்பந்தமாக ஆர்வம் காட்டவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால், பாண்டி உச்சக்கட்டமாக வெறுப்பு அடைந்தார். அதனால் கடந்த 9ம் தேதி மறுபடியும் அம்மையநாயக்கனூர் ஸ்டேஷனுக்கு சென்றார்.. ரொம்பவும் மனம் நொந்து போய் இருந்தார்.. நேராக அங்கு சென்று, போலீஸ் ஸ்டேஷன் வாசற்படியிலேயே உட்கார்ந்துவிட்டார்.. பிறகு, அங்கேயே விஷத்தை குடித்து விழுந்துவிட்டார்.. இதை பார்த்து பதறிய போலீசார், உடனடியாக பாண்டியை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தூக்கிய போலீஸ்

தூக்கிய போலீஸ்

ஆனாலும் பாண்டியின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.. பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.. இதனால் பாண்டியின் உறவினர்கள் மொத்த பேரும் கொந்தளித்து விட்டார்கள்.. திரண்டு வந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்ய போலீசார் முயன்றும் முடியவில்லை. அதற்குள் விஷயம், எஸ்பி பாஸ்கரன் வரை சென்றுவிட்டது.. உடனடியாக பாண்டி ஏற்கனவே கொடுத்த புகாரின்பேரில் நாச்சியப்பன், சங்கர், சின்ன கருப்பு ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய அதிரடி உத்தரவிட்டார்... இதையடுத்து 3 பேருமே கைது செய்யப்பட்டார்கள்.. அத்துடன் இது தொடர்பாக ஏடிஎஸ்பியை விசாரிக்கும்படி, எஸ்பி உத்தரவிட்டிருந்த நிலையில், தீவிர விசாரணையும் நடக்கிறது..

லுங்கி பாண்டி

லுங்கி பாண்டி

இப்படிப்பட்ட சூழலில்தான், பாண்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் வீடியோ காட்சி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. போலீஸ் ஸ்டேஷன் முன்பு, பாண்டி விஷமருந்து குடித்துவிட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது, அவருக்கு பக்கத்திலேயே அந்த பெண் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி நின்றுகொண்டு யாருடனோ போனில் பேசி கொண்டிருக்கிறார்.. வேறு சில போலீசாரும் அங்கேயே நின்று கொண்டுள்ளனர்.. லுங்கியுடன் காணப்படுகிறார் பாண்டி.. விஷத்தை குடித்துவிட்டு, உயிருக்கு தள்ளாடுகிறார்.. கைகளால் தன்னுடைய நெஞ்சை கெட்டியாக பிடித்து கொண்டு போராடுகிறார்.

ஆனாலும் இதை அங்கிருந்த பெண் போலீஸோ, மற்ற காவலர்களோ கண்டுகொள்ளவேயில்லை.. பிறகு, மெல்ல மெல்ல மயங்கி சரிந்து தரையில் சாய்ந்து விடுகிறார் பாண்டி.. அப்போதுகூட, அங்கிருந்த ஒருவரும் நகரவில்லை.. பாண்டியின் அருகே ஓடிவந்து, அவருக்கு என்ன நடந்தது என்று பார்க்கவுமில்லை.. ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும், மெதுவாக கிட்ட வந்து பார்க்கிறார்.. ஆனால், அவரிடம் எந்த பதட்டமும் டென்ஷனும் தென்படவில்லை.. பாண்டியின் உயிர் அப்படியே போய்விட்டது.. இவர்கள் அனைவரும் வேடிக்கை பார்த்ததுடன், அதை ஒருவர் வீடியோவும் எடுத்துள்ளார்..

மெத்தனம்

மெத்தனம்

இந்த வீடியோவை பார்த்துதான் மொத்த பேரும் கொந்தளித்து போயுள்ளனர். மனிதாபிமான அடிப்படையில்கூட, ஒரு உயிரை காப்பாற்ற யாருமே ஆர்வம் காட்டாததும், அலட்சியமாக நடந்துள்ளதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த வீடியோ இப்போது டிஐஜிவரை போய்விட்டது.. எஸ்பி உள்பட போலீஸ் அதிகாரிகளும் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. பாண்டியின் விஷயத்தில் மெத்தனமாக செயல்பட்டதும், எதிர்த்தரப்புக்கு சாதகமாக சண்முகலட்சுமி அமைந்ததும் விசாரணையில் தெரியவந்தது..

அரண்ட போலீஸ்

அரண்ட போலீஸ்

அதைத் தொடர்ந்து, எஸ்பி பரிந்துரையின் பெயரில், முதல்கட்ட நடவடிக்கையாக இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமியை ஆயுதப்படைக்கு நேற்று காலை ட்ரான்ஸ்ஃபர் செய்துள்ளனர்... பிறகு 2ம் கட்ட விசாரணை அடிப்படையில், நேற்று மாலையிலேயே இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டார்... இப்படி ஒரே நாளில் எஸ்பி மற்றும் ஏசி அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பதை கண்டு மாவட்டத்தில் உள்ள போலீசார் அரண்டு போய் இருக்கிறார்கள்.. ஆனாலும், உயிர்பிரியும் அந்த கடைசி தருவாயில், பாண்டி என்னவெல்லாம் நினைத்து கலங்கினாரோ???

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+