சென்னையில் இடியுடன் கூடிய மழை- தென்மாவட்டங்களில் விடியவிடிய கொட்டி தீர்த்தது!
சென்னை: சென்னை மாநகரில் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.
குமரிக்கடல், இலங்கைப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் தென் மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவுறுத்தி இருந்தது. பிற மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

சென்னையில் அண்ணா நகர், நெற்குன்றம், கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மழைநீர் தேங்காத வகையில் ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இதேபோல் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பல இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டியது. மதுரை, மேலூர், கொட்டாம்பட்டி பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் விட்டுவிட்டு கனமழை கொட்டியது. தென்காசி, ஶ்ரீவில்லிப்புத்தூர், ராமநாதபுரம் பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது.












Click it and Unblock the Notifications