இஸ்ரேல் ஈரானை அடிச்சா.. வத்தலக்குண்டுக்கு வலிக்கும்! வாழ வைக்காத வாழை இலை! வதங்கும் விவசாயிகள்!
திண்டுக்கல்: இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் காரணமாக வணிகப் பயன்பாட்டு சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான உணவகங்களில் உணவு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாழை இலை விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்கின்றனர் வாழை இலை வியாபாரிகள். சென்ற வாரம் 2000 ரூபாய் விற்கப்பட்ட வாழை இலை தற்போது 600 ரூபாய் வரை மட்டுமே விற்கப்படுவதாகவும், அதனை வாங்கக்கூட ஓட்டல் முதலாளிகள் முன் வரவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
ஈரான்- இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் காரணமாக கச்சா எண்ணெய் வரத்து குறைந்து சிலிண்டர் விலை மற்றும் வாகன கேஸ் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வணிக சிலிண்டர் முற்றிலுமாக கிடைக்காததால் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலையோர சிற்றுண்டி கடைகள் மூடப்பட்டு வருகிறது.
மேலும் ஓட்டல்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாட பணிகளுக்கு செல்லும் தொழிலாளிகள், மாணவிகள் என பல தரப்பினர் சிற்றுண்டி மற்றும் மதிய உணவு கிடைக்காமல் சிரமப்பட க்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஈரான்- இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் காரணமாக கச்சா எண்ணெய் வரத்து குறைந்து வணிக சிலிண்டருக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், வாழை இலை விற்பனை கடுமையாகச் சரிந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு, சித்தையன்கோட்டை, ஆத்தூர், செம்பட்டி, ஆவாரம்பட்டி, வேடசந்தூர், எரியோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வாழை சாகுபடியில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாழைக்காய்களுக்காக மட்டுமின்றி, இலை விற்பனைக்காகவும் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் தற்பொழுது போரின் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது. கடந்த வாரத்தில் ரூ.2000 வரை விற்கப்பட்ட 250 இலைகள் கொண்ட ஒரு கட்டு தற்போது ரூ.600 முதல் விற்பனை சய்யப்படுகிறது.
இதுகுறித்து வாழை இலை மொத்த வியாபாரியான திண்டுக்கல்லை சேர்ந்த வெற்றிவேல் கூறுகையில்," கடந்த சில தினங்களாக சிலிண்டர் தட்டுப்பாடு கடைகள் எதிரொலியாக சாலையோர சிற்றுண்டி மூடப்பட்டுள்ளது. மேலும் ஓட்டல்களில் வகைகள் குறைக்கப்பட்டு உணவு பாதிக்கப்பட்டதால் வாழை இலை கட்டு சப்ளை இல்லாமல் வாழை இலையின் விலை குறைந்துள்ளது. இந்த விலை குறைவால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாழை இலையை நம்பி தொழில் செய்யும் வியாபாரிகளும், தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications