Exclusive: ஆபாச படங்கள் வழக்கு- சிறப்புமிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பு-தமிழக மனுதாரர் ரூபன் பாலன்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: குழந்தைகளை பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம் பல்வேறு பரிந்துரைகளையும் வழங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்று வழக்கை தொடர்ந்த குழந்தைகள் உரிமை மீட்பு கூட்டமைப்பின் தமிழக உறுப்பினரான அமைதி அறக்கட்டளை இயக்குநர் ரூபன் பாலன் நமது ஒன் இந்தியா தமிழிடம் தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஜனவரி மாதம், குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களைப் பார்ப்பது குற்றமில்லை என்று தீர்ப்பு வழங்கியிருந்தார். நாடு முழுவதும் குழந்தைகள் உரிமைகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் போராடும் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 120 சமூக செயல்பாடாளர்கள் உள்ளடக்கிய குழந்தைகள் உரிமை மீட்பு கூட்டமைப்பு ( Justice Rights for Children Alliance-JRF) சார்பில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

supreme court madras high court

இந்த வழக்கில், வரலாறு சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இதன் மூலம், குழந்தைகளை பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமில்லை என்று உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ததுடன், பல்வேறு பரிந்துரைகளையும் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கை தொடுத்த JRCA அமைப்பின் தமிழக உறுப்பினர் மற்றும் 40 ஆண்டுகளாக குழந்தைகள் உரிமைகளுக்காக போராடும் அமைதி அறக்கட்டளை இயக்குநர் ரூபன் பால் பாஸ்கர் நமது ஒன் இந்தியா தமிழ் செய்தி இணையதளத்திடம் கூறியதாவது: இது POSCO வழக்குகளின் ஒரு முக்கிய மைல்கல். இப்போது குழந்தைகளின் ஆபாச படங்களைப் பார்ப்பது, அதற்கான தேவையையும், குழந்தைகளுக்கு எதிரான சூழ்நிலையும், குழந்தை கடத்தலையும், வன்முறையும் ஊக்குவிக்கிறது. இத்தீர்ப்பின் மூலம் ஒருவர் தமது வீட்டில் இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. சட்டபூர்வமாக இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்றதை மிகப் பெருமையாக கருதுகிறோம். இவ்வாறு அமைதி அறக்கட்டளை இயக்குநர் ரூபன் பால் பாஸ்கர் தெரிவித்தார்.

மேலும், இக்கூட்டமைப்பின் தலைவர் மற்றும் இவ்வழக்கின் மனுதாரர் புவன் ரிபு, கூறுகையில் "குழந்தைகளை உள்ளடக்கிய ஆபாச படம் என்பது சர்வதேச பிரச்சினை. இதில் இந்தியா மற்றறொரு முறை உலகத்திற்கு வழிகாட்டி உள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+