Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தட்டி தூக்குதே தமிழக அரசு..1 லட்சம் வீடுகள் ரெடி! அடுத்து 1 லட்சம் வெயிட்டிங்! அமைச்சர் குட்நியூஸ்.!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: கலைஞரின் கனவு இல்லம் திட்ட மூலம் தமிழகத்தில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட திட்டமிட்டு அதற்கான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 90 சதவீதம் பணிகள் பூர்த்தி அடைந்து விட்டன, ஒரு மாத காலத்தில் அனைத்து வீடுகளும் பயன்பாட்டிற்கு வந்து விடும் எனவும், மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் பிள்ளையார் ஊராட்சிக்கு உட்பட்ட மாதா நகருக்கு வறட்சி நிவாரண நிதி ரூபாய் 20 லட்சம் மற்றும் மாவட்ட கவுன்சிலர் நிதி ரூபாய் 10 லட்சம் மொத்தம் 30 லட்சம் மதிப்பில் புதிய குடிதண்ணீர் திட்டம் கொண்டுவரப்பட்டது.

Kalaignar Kanavu Illam Tamil Nadu i periyasamy

பணிகள் முடிந்த நிலையில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்கி பொதுமக்களிடையே உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,"நான் ஆத்தூர் பகுதியில் போட்டியிட்ட காலம் முதல் இன்று வரை 33 ஆண்டுகளாக என் மீது பாசம் வைத்திருக்கும் மக்களுக்கு நன்றி. தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்பட்ட பின்பு தான் 150 குடும்ப அட்டைகள் உள்ள இடத்திற்கும் நியாய விலை கடைகள் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் எளிதாக வீட்டுக்கு தேவையான ரேஷன் பொருட்களை வாங்கி செல்லலாம் என்ற நிலைமை உருவாகியுள்ளது.

கிராம ஊராட்சிகளை பொருத்தவரை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி அவர்களுக்கு தேவைப்படும் இடங்களில் பாலம் வசதி செய்து கொடுக்கப்படும். இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கலைஞரின் கனவு இல்லம் திட்ட மூலம் தமிழகத்தில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட திட்டமிட்டு அதற்கான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 90 சதவீத பணிகள் பூர்த்தி அடைந்து விட்டன. ஒரு மாத காலத்தில் அனைத்து வீடுகளும் பயன்பாட்டிற்கு வந்து விடும். குறிப்பாக ஒன்று சொல்ல வேண்டும் என்றால் இதில் பத்தாயிரம் பயனாளிகள் கலைஞரின் கனவு இல்ல வீட்டுக்கு குடிபெயர்ந்து விட்டார்கள்.

ஏப்ரல் மாதம் மீண்டும் ஒரு லட்சம் வீட்டிற்கு மனு பெறப்பட்டு அவர்களுக்கு வீடுகள் தர தயாராக தமிழக அரசு உள்ளது. கிராமப்புற ஏழை எளிய மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதுபோல பேரூராட்சிகளிலும் கலைஞரின் கனவு இல்லம் திட்ட மூலம் வீடுகள் வழங்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் தமிழக முதல்வர் அறிவித்தவுடன் பேரூராட்சிகளிலும் கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.

மற்ற திட்டங்கள் போல் இல்லாமல் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடுகள் கட்டும் பயனர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு கூட ரூபாய் 400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உடனடியாக வீடு கட்டும் பயனாளர்கள், வங்கி கணக்கிற்கு பணம் சேர்ந்து விட்டது. காரணம் மக்களின் தேவைகளை புரிந்து அவர்களுக்கான நல்லாட்சியை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். அனைவருக்கும் எல்லாம் அனைவரும் சமம் என்ற நிலைமை தமிழகத்தில் உருவாகி விட்டது. அதற்குக் காரணம், முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் வந்த திராவிட மாடல் ஆட்சி நாயகன், கழக தலைவர் மு.க.ஸ்டாலின் தான்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+