பணம் என்னடா பணம்.. சுற்றுலாப் பயணியின் 500 ரூபாய் நோட்டுக் கட்டை லபக்கிய குரங்கு! அப்பறம் என்னாச்சு?
திண்டுக்கல்: விடுமுறை தினத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. அந்த வகையில் கொடைக்கானல் குணா குகையை காண வந்த சுற்றுலா பயணியின் 500 ரூபாய் நோட்டு கட்டை ஆட்டைய குரங்கு, அவற்றை காற்றில் பறக்க விட்ட வீடியோ சமூக தலங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடக போன்ற பல்வேறு வெளிமாநிலங்களிருந்து விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் ஏராளமான ற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று வார இறுதி மற்றும் மூன்று நாள் தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது.

குறிப்பாக இங்குள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ்வாக், ரோஜா தோட்டம், பசுமை பள்ளத்தாக்கு, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் ஆகிய இடங்களில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் கூட்டமாக இயற்கை அழகை கண்டு ரசித்தும் புகைப்படங்களை எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் சுற்றுலாப்பயணிகள் நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்தும், ஏரிச் சாலையை சுற்றி சைக்கிள் சவாரி மற்றும் குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்து வருகின்றனர்.
கொடைக்கானலில் பல்வேறு சுற்றுலா இடங்கள் இருந்தாலும் குணா குகை எப்போதும் சுற்றுலா பயணிகள் விரும்பி செல்லும் இடமாக உள்ளது. மேலும் இந்த குணா குகைக்கு வனத்துறையினரிடம் நுழைவு கட்டணம் செலுத்திவிட்டு சிறிது தூரம் நடந்து சென்றால் அதன் பிறகு குணா குகையின் வெளி தோற்றத்தையும் இயற்கை எழில் கொஞ்சம் அழகையும் பசுமையான மர செடிகொடிகள் காணமுடியும், அழகும் ஆபத்தும் நிறைந்து காணப்படும் இந்த குணா குகையில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கடந்த சில நாட்களாகவே இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் இங்குள்ள கூட்டத்தையும் இயற்கை அழகியும் கண்டு ரசித்து வரும் நிலையில் அந்த பகுதியை உள்ள குரங்குகள் சுற்றுலா பயணிகளின் செல் போன் மற்றும் ஹேண்ட் பேக் ஆகியவற்றை எடுத்து மரத்தின் உட்சிக்கு சென்று விடுகிறது. அதன் பிறகு அந்த குரங்குகளிடம் இருந்து அந்த பகுதியில் வந்திருக்கும் சுற்றுலா பயணிகள் குரங்குகளை விட்டியும், கூச்சலிட்டு அந்த பொருட்களை மீட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் குணா குகையில் தொடரும் குரங்கின் சேட்டைகள். சுற்றுலா பயணியின் 500 ரூபாய் கட்டை எடுத்து ஒவ்வொரு நோட்டுகளாக வீசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்!#Kodaikanal #GunaCave #Monkey #ViralWatch #OneindiaTamil pic.twitter.com/ogYZB6193j
— Oneindia Tamil (@thatsTamil) June 15, 2025
இந்த நிலையில் தற்போது குணா குகை பகுதியில் உள்ள குரங்கு சுற்றுலா பயணியின் கைப்பையை எடுத்து சென்று மரத்தின் உட்சிக்கு சென்று அந்த கைப் பையில் இருந்த 500 ரூபாய் நோட்டை ஒவ்வொரு நோட்டாக எடுத்து மரத்தின் மேல் இருந்து கீழே தூக்கி போட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து இந்த பகுதியில் சுற்றுலா பயணிகளை அச்சுறுதியும், தொந்தரவும் செய்து வரும் குரங்குகளை பிடித்து அடர்ந்த வன பகுதிக்குள் விட வேண்டும் என்றும் அதே போல இந்த குணா குகையில் வன பணியாளர்களை பணியில் அமர்த்தி தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் பாதுகாகப்பாக சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications