Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லண்டன் டூ திண்டுக்கல்.. 70 வருடம் கழித்து வரும் இந்தியாவின் சொத்து.. விலை மதிப்பில்லா பொக்கிஷம்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: சுமார் 70 வருடங்களுக்கு முன்பு , அதாவது 1957-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வெண்கல சிலை ஒன்று காணாமல் போனது. இந்த சிலை 16ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பழமையான பாரம்பரிய சிலையாகும். விலை மதிப்பில்லா இந்தியாவின் சொத்து மீண்டும் இந்தியாவிற்கு வருகிறது. லண்டன் அருங்காட்சியகத்தில் இருந்த அந்த கோவில் சிலை இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதை தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது.

இந்தியாவின் அரிய பொக்கிஷமாக போற்றப்பட்ட பழங்கால கோயில் சிலைகள், அந்த காலத்தில் வெளிநாடுகளுக்கு கடத்தி விற்றுவிட்டார்கள். அப்படி விற்கப்பட்ட சிலைகளை மத்திய அரசு மீட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் இருந்து காணாமல் போன சிலைகள் பல்வேறு நாடுகளில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றன.

London to Dindigul India s priceless treasure arrives after 70 years


அருங்காட்சியகம்

இங்கிலாந்து நாட்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு சொந்தமாக ஆஷ்மோலியன் என்ற அருங்காட்சியகம் இருக்கிறது. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமங்கை ஆழ்வாரின் வெண்கல சிலை ஏலத்தில் எடுக்கப்பட்டு கடந்த 1967-ம் ஆண்டு அருங்காட்சியகத்தால் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது


தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில்

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள புகைப்பட காப்பகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் 1957-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் இந்த வெண்கல சிலையின் புகைப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆராய்ச்சியாளர் ஒருவர் கொடுத்த தகவலால் இந்த வெண்கல சிலை குறித்த விவரம் தெரியவந்தது.

இந்தியா வந்த அதிகாரிகள்

இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இங்கிலாந்து அருங்காட்சியகத்தின் நிபுணர்கள் இந்தியாவுக்கு வந்தனர், அவர்கள் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம், தமிழக அரசு அதிகாரிகள், கோவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வெண்கல சிலை தமிழ்நாட்டில் உள்ள கோவிலில் இருந்து திருடப்பட்டதையும், அது ஏலத்துக்கு வந்து அருங்காட்சியகத்துக்கு சென்றதையும் கண்டறிந்தார்கள்.

இந்தியாவிடம் ஒப்படைப்பு

இதைத்தொடர்ந்து திருடப்பட்ட சிலை தான் அருங்காட்சியகத்தில் உள்ள வெண்கல சிலை என்பதை உணர்ந்த அதிகாரிகள். லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்படைத்தனர். இந்திய கலாசார அமைச்சகத்தால் பரிமாற்ற பத்திரம் அங்கீகரிக்கப்பட்டு, தூதரகத்தால் கையொப்பமிடப்பட்ட பிறகு, வெண்கல சிலை இந்தியாவுக்கு அனுப்பப்பட இருக்கிறது


வெண்கல சிலைகள்

சிலை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை, லண்டனில் உள்ள பெருநகர போலீசாரின் கலை, பழங்கால பொருட்கள் பிரிவு ஆகியவற்றின் உதவியுடன் மீட்டெடுக்கப்பட்ட குடையுடன் அமர்ந்த விநாயகர், நடனமாடும் விநாயகர், நடனமாடும் குழந்தை பாலகிருஷ்ணர் உள்பட 5 வெண்கல சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன.

அருங்காட்சியக இயக்குனர் விளக்கம்

இதுகுறித்து ஆஷ்மோலியன் அருங்காட்சியக இயக்குனர் ஸ்டர்க்கி கூறும் போது, "இந்த வெண்கல சிலை தமிழ்நாட்டில் உள்ள தாடிக்கொம்புவில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் புகைப்படம் எடுக்கப்பட்டதற்கான சான்றுகள் இருப்பதை 5 ஆண்டுகளுக்கு முன்புதான் நாங்கள் அறிந்தோம். இதை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கான சாத்தியக்கூறு குறித்து இந்திய தூதரகத்துடன் ஆலோசனை நடத்தி அதனை ஒப்படைத்துள்ளோம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+