EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.!
திண்டுக்கல்: இஸ்ரேல் ஈரான் அமெரிக்கா இடையேயான போரால் இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வணிக சிலிண்டர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஹோட்டல்களை உணவு மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா காலத்தில் கூட இப்படி ஒரு நெருக்கடியை எதிர்கொண்டதில்லை என கூறுகின்றனர் திண்டுக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிவாயு போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹேர்மூஸ் நீரினையை மூடுவதாக ஈரான் அறிவித்து நிலையில் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான பீப்பாய் கச்சா எண்ணெய் உலகின் பிற நாடுகளுக்கு செல்வதற்கு தடை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் உணவகங்கள் ஹோட்டல்கள் உணவு தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பயன்படும் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ள நிலையில் மார்ச் 12ஆம் தேதி முதல் பல உணவகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

சிலிண்டர் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஹோட்டல்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு ஹோட்டல்களில் உணவு மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக சைனீஸ், வடஇந்திய உணவுகள் தயாரிக்கப்பட மாட்டாது என ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் சங்க மாநில துணை தலைவரும் திண்டுக்கல் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர் சங்க தலைவருமான ராஜ்குமார் பேசுகையில்," ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக தமிழகத்தில் ஹோட்டல்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எல்பிஜி கேஸ் சிலிண்டர் கிடைக்காததால் உணவு மெனுக்களில் மாற்றம் செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக அடுப்புகள் தொடர்ந்து எரியும் வகையில் தயாரிக்கப்படும் உணவுகளான சைனீஸ், வட இந்திய துரித உணவுகள், தோசை உள்ளிட்டவை இனி விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இட்லி சப்பாத்தி கலவை சாதம் உள்ளிட்ட உணவுகளை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறோம். மேலும் காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை மட்டுமே இந்த விற்பனையும் இருக்கும். மதியம் 2 மணி நேரம், இரவு 2 மணி நேரம் என விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
அது மட்டும் அல்லாமல் கொரோனா காலத்தில் கூட லாக் டவுன் ஏற்பட்டபோது எரிவாயு தட்டுப்பாடு ஏற்படவில்லை. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் பல கோடி நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. வட இந்திய உணவுகளை தயாரிக்கும் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
-
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications