"என் செல்போன திருடுனீங்கல்ல.. இனி யாருக்கிட்டேயும் இருக்கக்கூடாது" - போலீஸில் சிக்கிய "சபத திருடன்"
கூலித்தொழிலாளியாக இருந்த தான், எப்படி செல்போன் திருடனாக மாறினேன் என்பதே 'பாட்ஷா' திரைப்பட ரேஞ்சுக்கு பிளாஷ்பேக் கூறியிருக்கிறான் அந்த திருடன்.
திண்டுக்கல்: தனது செல்போன் திருடுபோன விரக்தியில் இனி ஒருவரிடமும் செல்போன் இருக்கக் கூடாது என சபதமிட்டு நூற்றுக்கணக்கான செல்போன்களை திருடிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில் "கூலித்தொழிலாளியாக இருந்த நான்.. எப்படி திருடனாக மாறினேன் தெரியுமா?" என சினிமா கதாநாயகனை போல பேசியுள்ளான் அந்த திருடன்.
இதையடுத்து, அவன் திருடிய சாதாரண செல்போன்கள் முதல் விலை உயர்ந்த செல்போன்கள் வரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

விறுவிறு 'பிளாஷ்பேக்'
பல 'ஆன்ட்டி - ஹீரோ' சப்ஜெக்ட் திரைப்படங்களை பார்த்திருப்போம். அதில் திருடனாகவோ அல்லது சைக்கோ கொலையாளியாகவோ கதாநாயகன் இருப்பார். போலீஸ் கண்களில் மண்ணை தூவி பல குற்றங்களை செய்யும் அவர் இறுதியில் பிடிபட்டும் விடுவார். அப்போது அவர், தனக்கு நடந்த சில அநியாயங்களை கூறி, "இதனால்தான் இப்படி மாறினேன்" எனக் கூறுவார் அல்லவா.. அதே பாணியில், திண்டுக்கல்லில் சிக்கிய திருடன் தனது சோக பிளாஷ்பேக்கை போலீஸில் கூறியிருக்கிறான். அந்த சம்பவம் குறித்து இங்கு காண்போம்.

சின்னாபின்னமான திருடன்
திண்டுக்கல் மாவட்டம் பழைய செம்பட்டியை சேர்ந்தவர் வீரமணி. இவரது வீட்டில் கடந்த வாரம் பட்டப்பகலில் புகுந்த திருடன், அங்கிருந்த விலைமதிப்பு மிகுந்த செல்போனை திருடிவிட்டு தப்பியோட முயன்றுள்ளான். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அவனை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவனை சாலையில் போட்டு புரட்டி எடுத்து நையப்புடைத்தனர்.

கூலித்தொழிலாளி டூ செல்போன் திருடன்
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு விரைந்து வந்து, பொதுமக்களிடம் இருந்து திருடனை மீட்டனர். அவனிடம் நடத்திய விசாரணையில், அவன் ஈரோட்டை சேர்ந்த செல்வம் (37) என்பது தெரியவந்தது. மேலும், கூலித்தொழிலாளியாக இருந்து எப்படி செல்போன் திருடனாக மாறினேன் என தனது பிளாஷ்பேக்கை 'பாட்ஷா' திரைப்பட ரேஞ்சுக்கு கூறியிருக்கிறான் அவன்.

வெறித்தனமான சபதம்
அதாவது, கூலித்தொழிலாளியாக இருந்த செல்வம் தினமும் இரவு மது அருந்துவது வழக்கமாம். அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு நாள் மது அருந்தி போதையில் இருந்த போது, அவனது செல்போன் திருடு போய்விட்டதாம். அன்றைக்கு தான் ஒரு சபதத்தை எடுத்தாராம். "என்னுடைய செல்போனையே திருடினீங்களே.. இனி யாரிடமும் செல்போன் இருக்கக்கூடாது" என்பதுதான் அந்த சபதம். அந்த சபதத்தின்படியே இன்று பிரபல செல்போன் திருடனாக தான் உருவெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளான். இதை கேட்ட போலீஸார், அவரை செமத்தியாக கவனித்து சிறையில் அடைத்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications