திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

’நத்தம்’ கோட்டையில் ஓட்டை போட்ட ஓபிஎஸ்! முக்குலத்தோரை வைத்து மாஸ் ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே..?

Google Oneindia Tamil News

திண்டுக்கல் : அதிமுக துணை பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் கட்டுப்பாட்டில் உள்ள திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த இரு ஒன்றிய செயலாளர் ஓபிஎஸ் தரப்புக்கு தாவி உள்ளதோடு மேலும் சில ஒன்றிய செயலாளர்களும் அணி மாற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால் திண்டுக்கல் அதிமுகவில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஐவர் அணியில் இடம் பெற்று இருந்தவர்களில் தென் மாவட்டத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வமும் நத்தம் விஸ்வநாதன் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

அவரது மறைவுக்குப் பிறகு அதிமுகவின் மற்றொரு முக்கிய அமைச்சராக இருந்த திண்டுக்கல் சீனிவாசன் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு தாவிய நிலையில் நத்தம் விஸ்வநாதன் ஓபிஎஸ் முகாமில் தொடர்ந்து இருந்தார்.

ஸ்கெட்ச் 315! போகஸை திருப்பிய ஸ்டாலின்! அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு ஏன்? இதுதான் காரணம் ஸ்கெட்ச் 315! போகஸை திருப்பிய ஸ்டாலின்! அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு ஏன்? இதுதான் காரணம்

 நத்தம் விஸ்வநாதன்

நத்தம் விஸ்வநாதன்

2016 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததால் கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டிருந்த நத்தம் விஸ்வநாதன் அப்போது ஓபிஎஸ்-ன் ஆதரவு தேவைப்பட்டதால் அவர் அணியில் இருந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் நத்தத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அதனை பிறகு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தஞ்சம் புகுந்தார். தற்போது நடைபெற்ற அதிமுக பொது குழு உள்ளிட்ட விவகாரங்களை எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளராக மாறிய அவர் அரசியல் எதிரியாக கருதப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன் உடன் தற்போது ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறார்.

ஓபிஎஸ் அதிருப்தி

ஓபிஎஸ் அதிருப்தி

எடப்பாடி பழனிச்சாமியின் பழனி வருகைக்காக திண்டுக்கல் சீனிவாசனம் நத்தம் விஸ்வநாதன் ஒன்றாக இணைந்து பணியாற்றியது அதிமுக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அதே நேரத்தில் கடந்த ஆண்டுகளில் தனக்கு நெருக்கமாக இருந்த நத்தம் விஸ்வநாதன் எடப்பாடி தரப்புக்கு சென்றது ஓபிஎஸ் தரப்பை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது.

தாவிய ஒன்றிய செயலாளர்கள்

தாவிய ஒன்றிய செயலாளர்கள்

இதையடுத்து நத்தம் விஸ்வநாதன் கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாகிகளை ஓபிஎஸ் தரப்புக்கு இழுக்கும் முயற்சிகள் நடைபெற்றன. அந்த வகையில் கடந்த இரண்டு முறை நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட இரு ஒன்றிய செயலாளர்கள் ஓபிஎஸ் தரப்புக்கு தாவியுள்ளனர். ரெட்டியார்சத்திரம் மேற்கு ஒன்றிய செயலாளரான பசும்பொன் வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் மோகன் முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் உள்ளிட்டோர், மாயத்தேவர் மறைவின் போது வந்த ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அவர் உடன் பயணித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மீண்டும் திட்டம்

மீண்டும் திட்டம்

இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி இடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகளின் பதவிகள் விரைவில் பறிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் விஸ்வநாதன் தரப்புக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் மேலும் பல நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்களை இழுக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் நாட்களில் மேலும் இரண்டு ஒன்றிய செயலாளர்கள் பத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஓ பன்னீர்செல்வத்தை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாக இருக்கும் நிலையில் அதிமுகவில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

English summary
Two union secretaries from Dindigul East district, which is controlled by former AIADMK minister Natham Viswanathan, have defected to the OPS side;அதிமுக முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் கட்டுப்பாட்டில் உள்ள திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த இரு ஒன்றிய செயலாளர் ஓபிஎஸ் தரப்புக்கு தாவி உள்ளனர்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X