சிவகார்த்திகேயனுக்கு சனி பிடித்துவிட்டது.. நாஞ்சில் சம்பத் சர்ச்சை பேச்சு.. மீண்டும் சிக்கிய தவெக
திண்டுக்கல்: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சியும் களத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள். திமுக பிரம்மாண்ட கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கிறது. தவெக திமுக எதிர்ப்பு அரசியலை தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா நடிகர் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், தற்போது மற்றொரு நிர்வாகியான நாஞ்சில் சம்பத் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். (Nanjil Sampath)
திண்டுக்கலில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசும்போது, "எங்களுக்கு மாற்று சக்தியாக தமிழ்நாட்டில் யாருமில்லை. இன்றைக்கு தமிழகத்தில் அங்கீகரிக்ப்பட்ட எதிர்க்கட்சி அதிமுகதான். அதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியது சசிகலா. அவர் சிறைக்கு சென்றதும் அவரையே கட்சியை விட்டு நீக்கினார் எடப்பாடி. சசிகலா கதறி அழுகிறார். எடப்பாடி பழனிசாமி ஒரு நச்சு பாம்பு.

ரசிகர் பட்டாளம்
எங்கள் தலைவர் 13 வயதிலே சினிமா துறைக்கு வந்தார். 33 வருடங்களில் 69 படங்களை எங்கள் தலைவர் நடித்தார். இந்திய துணை கண்டத்தில் இவரை போல யாருக்கும் ரசிகர்கள் இல்லை. அரசியல் வரலாற்றில் கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் அமீர்கானைவிட எங்கள் தலைவர் அதிக ரசிகர்களை வைத்துள்ளார். மகளிருக்கு விடியல் பயணம், உரிமை தொகை வழங்கிவிட்டு அதை ஓசி என்று திமுகவினர் விமர்சித்தனர்.
சிவாஜிகணேசன் ஓட்டையே
சிவாஜிகணேசனின் ஓட்டையே போட்டவர்கள் இவர்கள். சிவாஜிகணேசனே தியாகராயநகரில் பொறுமையாக மாலை வாக்களிக்க சென்றபோது, கட்டபொம்மன் படம் வசன்த்தை பேசிக் கொண்டு வாக்குச்சாவடி மையத்திற்கு சென்றார். அங்கு அவருடைய பெயர் ஒட்டு எல்லாவற்றையும் கேட்டு, உங்கள் வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டது என்று கூறினார்கள். அவருடைய வாக்கையே மாற்றி போட்டவர்கள்.
சிவகார்த்திகேயன் குறித்து சர்ச்சை
நடிகர் சிவகார்த்திகேயன் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபடுகிறார். அவர் என்றைக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டாரோ, அன்றைக்கே அவருக்கு சனி ஆரம்பித்துவிட்டது. எங்கள் தலைவர் 69வது படத்தை ஆரம்பித்தார். அவருக்கு இந்த நாட்டின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது கனவில்லை" என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications