இரவெல்லாம் அழுத புதுமணப்பெண்.. 2 மாத கர்ப்பமாம்.. உடம்பெல்லாம் என்னாச்சு.. கொடைக்கானல் கொடுமை

கொடைக்கானலில் புதுமணப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளா

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: கொடைக்கானலில் புதுமணப்பெண் மரணத்தில் மர்மம் நீடித்து வருகிறது.. ஒருபக்கம் போலீசாரும், மறுபக்கம் ஆர்டிஓவும் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் சந்திரன்... இவர் ஒரு எலக்ட்ரீசியன்.. இவரது மகள் மோனிஷா.. எம்.காம் படித்துள்ளார்.

இவர் ஆரோக்கியசாமி என்பவரை 5 வருடங்களாகவே காதலித்து வந்தார்.. ஆரோக்கியசாமி கொடைக்கானலை சேர்ந்தவர்.. என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்..

 மோனிஷா

மோனிஷா

இரு வீட்டிலும், தங்கள் காதலை பற்றி சொல்லவும், இருவரின் பெற்றோர்களும் திருமணத்துக்கு சம்மதம் சொல்லி உள்ளனர்.. அதன்படி, கடந்த பிப்ரவரி 21ந்தேதி கொடைக்கானலில் திருமணம் நடந்தது.. ஊரே மலைத்து பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்டமாக இந்த திருமணத்தை இரு வீட்டினரும் நடத்தி காட்டினார்கள்.. இந்நிலையில், கடந்த 4ம் தேதி மோனிஷாவின் வீட்டுக்கு, ஆரோக்கியசாமி குடும்பத்தினர் போன் செய்தனர்.. மோனிஷா தூக்குப்போட்டு இறந்துவிட்டார் என்று சொல்லி உள்ளனர்.

 சடலம் - காயம்

சடலம் - காயம்

இதை கேட்டு பதறிப்போன மோனிஷா குடும்பத்தினர் விரைந்து வந்தனர்.. மோனிஷாவின் சடலத்தை கண்டு கதறி புரண்டு அழுதனர்... அப்போதுதான் மோனிஷாவின் கழுத்திலும், உடம்பிலும் இருந்த காயங்களை பார்த்துள்ளனர்.. இதனால் மேலும் கொந்தளித்துபோன பெற்றோர், போலீசுக்கு சென்று புகார் தந்தனர்.. "எங்கள் மகள் தைரியசாலி.. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை.. கணவர் மற்றும் அவரது உறவினர்கள் அடித்து கொன்று தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்.. இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளது, உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்று கேட்டனர்.

மந்தம்

மந்தம்

திருமணமாகி 3 மாதமே ஆவதால், கொடைக்கானல் ஆர்டிஓ தரப்பிலும் விசாரணை நடந்தது.. ஆனால், மோனிஷா இறந்து 20 நாட்களுக்கு மேலாகியும், ஒருவரும் கைதாகவில்லை.. விசாரணையும் மந்தமாகி விட்டது.. விசாரணை பற்றியும் மோனிஷா வீட்டில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்கிறார்கள்.. இதனால், ஆத்திரமடைந்த மோனிஷா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு, கொடைக்கானல் நாயுடுபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

 உத்தரவாதம்

உத்தரவாதம்

விசாரணை என்னாச்சு? குற்றவாளியை கைது செய் என்ற கோஷங்களை காவல்துறை மற்றும் ஆர்டிஓக்கு எதிராக எழுப்பினார்கள்.. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக மறியல் நடந்ததால், போக்குவரத்து அளவுக்கு அதிகமாகவே பாதிக்கப்பட்டது.. தகவலறிந்து போலீசாரும் விரைந்து வந்தனர்.. விரைவில் குற்றவாளியை அடுத்த 24 மணி நேரத்தில் கைது செய்வதாக உத்தரவாதம் தந்தனர்.. அதற்கு பிறகே பெண் வீட்டினர், மறியலை கைவிட்டனர்.

கர்ப்பம்

கர்ப்பம்

மோனிஷாவுக்கு 23 வயதாகிறது.. இப்போது 2 மாதம் கர்ப்பமாகவும் இருந்துள்ளார்.. மோனிஷா முதுகலை பட்டம் பெற்றவர்.. ஆரோக்கியசாமி இளங்கலை பட்டம் பெற்றவர்.. இதனால் 2 பேருக்கும் இடையே ஈகோ பிரச்சினை இருந்து வந்ததாம்.. கல்யாணம் ஆன ஒருசில நாட்கள்தான் இவர்கள் சந்தோஷமாக இருந்தனர் என்றும், ஒவ்வொரு நாளும் தங்கள் மகள் அழுதுகொண்டே இருந்ததாகவும் பெற்றோர் கூறுகிறார்கள். கடந்த 2-ந்தேதி மோனிஷா, அவர் அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்..

அட்வைஸ்

அட்வைஸ்

மாமியார் வீட்டில் நடந்ததை எல்லாம் சொல்லி அழுதுள்ளார்.. அவர்களும் தங்கள் மகளுக்கு அறிவுரை சொல்லி, ஆரோக்கியசாமியுடனேயே அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. ஆனால், மறுநாளே மோனிஷா இப்படி தூக்குப்போட்டு கொண்டதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக சொல்கிறார்கள்.. தற்கொலைக்கு மோனிஷா முயன்றுவிட்டதால், அவரை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகதான் முதலில், மோனிஷா வீட்டுக்கு தகவல் போயுள்ளது.. ஆனால், நேரில் வந்து பார்த்தபோதுதான், ஆஸ்பத்திரியில் மோனிஷாவின் சடலம் கண்டு கதறி அழுதுள்ளனர்.. விசாரணை இன்னும் நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+