சாமியோவ்..தடையை மீறி தண்டோரா! தலைமை செயலாளர் உத்தரவை காற்றில் விட்ட அதிகாரிகள்! திண்டுக்கல் ஷாக்!
திண்டுக்கல் : அரசின் அறிவிப்புகளை தண்டோரா மூலம் அறிவிப்பது தாழ்த்தப்பட்ட நிலையில் உள்ள மக்களை மேலும் புண்படுத்துவது போல இருப்பதால் இனிமேல் தண்டோரா முறையை பயன்படுத்தக் கூடாது என தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்ட நிலையில், திண்டுக்கல்லில் அரசின் உத்தரவை மீறி தண்டோரா போட வைத்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பண்டைக் காலங்கள் முதல் அரசு அறிவிப்புகள் கனமழை எச்சரிக்கை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கு மக்களை எச்சரிப்பதற்காக தண்டோரா போடும் பழக்கம் இன்னும் நடைமுறையில் இருக்கிறது.
தண்டோரா அல்லது பறை மூலம் சத்தமாக இசைத்து பின்னர் மக்களுக்கு சொல்ல வேண்டிய அறிவிப்புகளை ஊரகப் பணியாளர்கள் ஒவ்வொரு ஊரில் உள்ள தெருக்களின் முனைகளில் நின்று சத்தமாகச் சொல்லிவிட்டு செல்வார்கள்.

தண்டோரா
புயல், வெள்ளம், காட்டு யானை நடமாட்டம் உள்ளிட்டவை காரணமாக மக்களுக்கு எச்சரிக்கையானது காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரை தண்டோரா முறை மூலம் தான் இந்த தகவல்கள் மக்கள் கூடும் இடங்களில் அறிவிக்கப்பட்டன. தகவல் தொடர்பு சாதன வசதிகள் பல்கிப் பெருகிவிட்ட இந்த காலத்தில் உலக நாடுகளுக்கு இணையாக போட்டி போடும் இந்தியாவில் இன்னும் தண்டோரா போடுகின்ற முறையானது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை இன்னமும் கீழ் நிலையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இழிவு படுத்தும் செயல்
தண்டோரா அறிவிப்பை சொல்லும் பணியாளர்கள் இறுதியில் 'சாமியோவ்' என்று சொல்வதும் நடைமுறையில் இருக்கிறது. இவ்வாறு சொல்வது அந்த சமுதாயத்தினரை இழிவு படுத்துவது போல் இருக்கிறது என சர்ச்சை எழுந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் இந்த முறையை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் இது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருந்தார்.

தடை விதிக்க வேண்டும்
அதில்,"மக்களிடம் முக்கிய செய்திகளை விரைவாக சேர்க்கும் விதத்தில் இன்னும் பல ஊர்களில் தண்டோரா போடும் பழக்கம் இருப்பதையும் அதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதையும் கண்டேன் அறிவியல் வளர்ந்து விட்டது தொழில்நுட்பம் பெருகிவிட்டது. எனவே தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது மீறி ஈடுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் இச்செய்து ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமாறு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்" என கூறியிருந்தார். இதற்கு பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் வரவேற்பு தெரிவித்திருந்தன.

கொந்தளிப்பு
திண்டுக்கல்லில் அரசின் உத்தரவை மீறி தண்டோரா போட வைத்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் புகழ்பெற்ற சௌந்தரராஜ பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதற்காக வடமதுரை பேரூராட்சி பணியாளர்களை வடமதுரை நகர் முழுவதும் தண்டோரா போட வைத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்திருக்கிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications