சர்தார் சகவாசம்! ஊரெல்லாம் தேடிய போலீஸ்.! பூட்டிய வீட்டில் பதுங்கிய மனிஷா! தொக்காய் சிக்கிய சீமா..!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தம்பியைக் கூலிப்படை வைத்து கொலை செய்ய முயன்ற சகோதரிகளை போலீசார் தேடி வந்த நிலையில் பூட்டிய வீட்டுக்குள்ளேயே அவர்கள் பதுங்கியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அருகில் உள்ள குடைபாறைப்பட்டியில் குமரேசன் என்பவரது மனைவி மனிஷா வசித்து வருகிறார். இந்நிலையில் குமரேசனை கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தது.

அதன்பிறகு மனிஷா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். அப்போது குடைபாறைப்பட்டியை சேர்ந்த சர்தார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

கத்திக்குத்து

கத்திக்குத்து

இதனை மனிஷாவின் உறவினரான சூர்யா என்பவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சர்தார் தனது நண்பர்களான ரியாஸ், யோகராஜ், கவுதம் ஆகியோருடன் சேர்ந்து சூர்யாவை சரமாரியாக கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த சூர்யா திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ரவுடிக்ள் கைது

ரவுடிக்ள் கைது


இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் 7 பேர் மீது வழக்குபதிவு செய்து சர்தார், ரியாஸ், யோகராஜ், கவுதம் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த மனிஷா, சகோதரி சீமா, தாய் தமிழரசி ஆகிய 3 பேரை தேடி வந்தனர். ஆனால் அவர்கள் எங்கு தங்கி உள்ளனர் என போலீசாரால் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது. திண்டுக்கல் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் தலைமையில் போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

வீட்டுக்குல் பதுங்கல்

வீட்டுக்குல் பதுங்கல்

அப்போது அவர்கள் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளேயே தங்கியிருந்தது தெரியவந்தது. அவர்கள் பயன்படுத்திய செல்போன் மூலம் இது உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து வீட்டை திறந்து சோதனை செய்ய திண்டுக்கல் நீதிமன்றத்தில் அனுமதி கடிதம் பெறப்பட்டது. இதனைதொடர்ந்து மகளிர் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி மற்றும் விக்டோரியா லூர்துமேரி, திலகா, வினோதா ஆகியோர் கொண்ட மகளிர் போலீசார் வீட்டை சுற்றி வளைத்தனர்.

பெரும் பரபரப்பு

பெரும் பரபரப்பு

அப்போது வீட்டினுள் பதுங்கியிருந்த மனிஷா மற்றும் சீமாதேவியை ஊர் பொதுமக்கள் உதவியுடன் வெளியே கொண்டு வந்தனர். இவர்களை வெளியே அழைத்துவருவதை பார்த்த அவர்களது தாய் தமிழரசி மற்றொரு வீட்டில் இருந்து ஓடி வந்தார். இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+