வெற்றி வேல் முருகனுக்கு.. பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு! ஜரூராக நடக்கும் ஏற்பாடுகள்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட, பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24, 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. இந்நிலையில் இன்று இந்நிகழ்ச்சிக்கான கால்கோள் ஊன்றும் விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். மாநாட்டின் போது சொற்பொழிவு, ஆய்வு கட்டுரை சமர்பித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடக்கவுள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீட்டான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அனைத்து உலோக முத்தமிழ் முருகன் மாநாடு வருகின்ற 24 மற்றும் 25ஆம் தேதி அருள்மிகு பழனி ஆண்டவர் கலை கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஐந்து ஆய்வரங்கங்கள், 1300 பேர் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க உள்ளனர். இதில் வெளிநாட்டினர் 39 பேர் ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கின்றனர். இது தவிர 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் 4 நீதி அரசர்கள், 15 ஆதீனங்கள், 30 ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டின் விழா மலர் மற்றும் ஆய்வு கட்டுரை மலர் என இரண்டு மலர்களாக வெளியிடப்படவுள்ளது.
3டி வடிவில் திரைபடங்களாக 100 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யபடுகிறது. முருகன் பெருமை விளக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் முருகன் புகழை சொல்லும் கும்மியாட்டம் , கந்த சஷ்டி கவசம் , காலை 8.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும் பின்னர் 2 மணி முதல் இரவு 8 மணி வரை நிகழ்ச்சி திட்டமிட பட்டுள்ளது.

மேலும் மாநாட்டை முன்னிட்டு 8 இடங்களில் அலங்கார வரவேற்பு ,தலைவர்கள் மாநாட்டு வரும் 8000 பக்தர்கள் அமைந்து பார்வையிடும் வகையில் பந்தல்கள் அமைக்கப்பட உள்ளன. மாநாட்டு வந்து செல்பவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும் என்பதால் சுகாதாரப் பணிகள் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதற்காகவும் தூய்மை பணியாளர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல், பிரத்தியேகமாக கூடிய மருத்துவ வாகனங்கள், தேவையான அளவு பேருந்துகள் இயக்கவும், வருகின்ற நபர்களுக்கு குடிநீர், இயற்கை உபாதையில் கட்டமைப்புகள், மாற்றுத்திறனாளிகள் அரங்கத்திற்கு சிரமம் இல்லாமல் வந்து செல்லும் வழியில் நான்கு சக்கர நாற்காலிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு நாள் மாநாட்டில் 30 ஆயிரம் பேர் சாப்பிட வசதியாக ஆங்காங்கே ஸ்டால்கள் மற்றும் உணவு வழங்கிடவும் பக்தர்கள் அமர்ந்து சாப்பிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்ட தன்னார்வலர்கள், மாணவ ,மாணவிகளை பயன்படுத்திக் கொள்ளவும் , கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என 450-க்கும் மேற்பட்டவர்கள் இரண்டு நாட்கள் சீருடை இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்கான கால்கோள் ஊன்றும் விழா அருள்மிகு பழனியாண்டவர் கலை கலைக்கல்லூரியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ,பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்டார் கலந்து கொண்டு நிகழ்ச்சி துவக்கி வைத்துள்ளனர்.













Click it and Unblock the Notifications